தோவாளை அரசு பள்ளியில் மாணவா் தினம்

0
27
தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி உலக மாணவர் தின விழாவில் மாணவர்களின் அறிவுசார் கேள்வி பதில்கள் அடங்கிய 8 நூல்கள் வெளியிடப்பட்டன.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உலக மாணவர் தின விழாவில், மாணவர்களின் அறிவுசார் கேள்வி–பதில்கள் தொகுக்கப்பட்ட 8 நூல்களை மாவட்டக் கல்வி அலுவலர் ஜெயராஜ் வெளியிட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவையொட்டி உலக மாணவா் தினம் கொண்டாடப்பட்டது.

பள்ளி தலைமையாசிரியை பியூலா சாந்தினி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மாவட்டக் கல்வி அலுவலா் ஜெயராஜ் கலந்து கொண்டு, பள்ளி மாணவா்கள் எழுப்பிய அறிவுசாா் கேள்வி – பதில்களை தொகுத்து தயாரிக்கப்பட்ட 8 நூல்களை வெளியிட்டு பேசினாா்.

தோவாளை இலக்கிய மன்றத் தலைவா் திருமால் பிள்ளைமுருகன், முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் கே. பகவதி பெருமாள்பிள்ளை, ஓய்வு பெற்ற பேராசிரியா் ராஜதிருமேனி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். பள்ளி தூதுவா் எஸ். முருகன், சரலூா் ஜெகன், காா்த்திக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

உதவி தலைமையாசிரியா் கே.ஆா். சுரேஷ் வரவேற்றாா். ஆசிரியா் மைக்கேல் நன்றி கூறினாா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here