உழைப்பு, நேர்மை, விடாமுயற்சியுடன் முன்னேற மாணவர்களுக்கு பேரவைத் தலைவர் அறிவுரை

0
29

மேட​வாக்​கத்​தில் உள்ள காயிதே மில்​லத் ஆண்​கள் கல்​லூரி​யின் 43-வது பட்​டமளிப்பு விழா நேற்று கல்​லூரி வளாகத்​தில் நடை​பெற்​றது. இதில் சட்​டப்​பேரவைத் தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகர் சிறப்பு விருந்​தின​ராகக் கலந்து கொண்டு, 867 மாணவர்​களுக்​குப் பட்​டங்​களை வழங்​கினார்.

இவர்​களில் 39 பேர் முது​நிலைப் பட்​ட​தா​ரி​கள். மேலும், 3 மாணவர்​கள் பல்​கலைக்​கழகத் தரவரிசைப் பட்​டியலில் இடம் ​பி​டித்​துச் சாதனை படைத்​தனர். விழா​வில், கல்​லூரி முதல்​வர் முனைவர் மு. அம்​துல் தவாப் வரவேற்​புரை வழங்​கினார்.

கல்​லூரி​யின் செயலரும் தாளாள​ரு​மான எம்.ஜி. தாவூத் மியாகான் தலைமை வகித்​தார். சென்னை குருநானக் கல்​லூரி​யின் செயலரும் தாளாள​ரு​மான மஞ்​சித் சிங் நய்யார் வாழ்த்​திப் பேசினார்.

கல்​லூரி​யின் செயலரும் தாளாள​ரு​மான எம்.ஜி. தாவூத் மியாகான் பேசுகை​யில், காயிதே மில்​லத் முகமது இஸ்மாயில் சாஹிப் போற்​றிய உயரிய மதிப்​பு​கள், இலட்​சி​யங்​கள், கொள்​கைகளை மாணவர்​கள் பின்​பற்ற வேண்​டும். ஒழுக்​கம், நேர்மை, சமூகப் பொறுப்​புணர்​வுடன் செயல்​பட வேண்​டும்.

பட்​டங்​களை​ விட நற்​பண்​பு​களும் சமூகத்​துக்​கான பங்​களிப்​பு​களுமே கல்​வி​யின் உண்​மையான அடை​யாளங்​கள். பட்​டமளிப்பு உரையாற்​றிய சட்​டப்​பேரவைத் தலை​வர் ஜே.சி.டி. பிர​பாகர், மாணவர்​கள் பல ஆண்​டுகளாக மேற்​கொண்ட உழைப்​புக்​குக் கிடைத்த அங்​கீகாரமே பட்​டம். அவர்​களின் வெற்றி பெற்​றோருக்​கும் கல்​லூரிக்​கும் பெருமை சேர்க்​கிறது.

கல்​லூரிப் படிப்​புடன் கற்​றல் முடிவதில்லை. வாழ்க்கை அனுபவங்​களில் இருந்​தும் தொடர்ந்து கற்​றுக்​கொண்டு, சவால்​களை எதிர்​கொள்ள வேண்டும். நேர்மை, கடின உழைப்பு, விடா​முயற்சி ஆகிய​வையே உயர்வுக்கு வழிவகுக்​கும்.

தகவல் தொடர்பு, கணினி, சிக்​கல்​களுக்​குத் தீர்வு காணுதல் உள்​ளிட்ட திறன்​களை வளர்த்​துக்​கொண்டு, தொழில்​முனைவிலும் ஈடு​பட வேண்​டும். அரசு நிர்​ணயித்த கல்​விக் கட்​ட​ணத்தை மட்​டுமே பெற்று, கூடுதல் கட்​ட​ணம் வசூலிக்​காமல் கல்​விச் சேவை​யாற்​றும் கல்​லூரியைப் பாராட்​டினார்.

கல்வி, ஆராய்ச்சி, சமூகப் பொறுப்​புணர்வு ஆகிய துறைகளில் கல்​லூரி​யின் பங்களிப்​பையும் குறிப்​பிட்​டார். மஞ்​சித் சிங் நய்​யார் பேசுகை​யில், பட்​ட​தா​ரி​கள் போதைப்​பொருள் இல்​லாத தமிழகத்தை உரு​வாக்​கப் பாடு​பட வேண்​டும்.

பெற்​றோரை மதித்து, அவர்​களின் முது​மைக் காலத்​தில் துணை​யாக இருக்க வேண்​டும். சமூக நலனுக்​காகப் பொதுச் சேவை​யில் ஈடு​பட வேண்​டும் என அறி​வுறுத்​தினார். விழா​வில் கல்​லூரி நிர்​வாகி​கள், பேராசி​ரியர்​கள், அலு​வல​கப் பணி​யாளர்​கள், பெற்​றோர்​கள் மற்​றும் மாணவர்​கள் கலந்து கொண்​டனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here