சென்னையில் கொட்டித்தீர்த்த அதிகனமழை: வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

0
22

மாநகரில் நேற்று முன்​தினம் கொட்​டித்​தீர்த்த அதி​க​னமழை காரண​மாக திரு​வொற்​றியூர், ஆர்​.கே.நகர் பகு​தி​களில் வீடு​களுக்​குள் மழைநீர் புகுந்​த​தால் பொது​மக்​கள் அவதிக்​குள்​ளா​யினர். பாரி​முனை​யில் அதி​கபட்​ச​மாக 36 செமீ மழை பதி​வாகி​யுள்​ளது.

வங்​கக்​கடலில் நில​விய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரண​மாக, சென்னை மற்​றும் அதன் புறநகர்ப் பகு​தி​களில் நேற்று முன்​தினம் மாலை முதல் நேற்று அதி​காலை வரை அதி​க​னமழை பெய்​தது. இதனால் மாநகரின் பல்​வேறு சாலைகளில் மழைநீர் தேங்​கி, கடும் போக்​கு​வரத்து நெரிசல் நில​வியது.

என்​.எஸ்​.சி போஸ் சாலை, வட சென்​னை​யில் பட்​டாளம், தண்​டை​யார்​பேட்டை வ.உ.சி.நகர், திரு​வொற்​றியூரின் சில பகு​தி​கள், வேளச்​சேரி​யில் ஏஜிஎஸ் காலனி உள்​ளிட்ட பகு​தி​களில் வெள்​ளநீர் வீடு​களுக்​குள் புகுந்து பொது​மக்​கள் அவதிக்​குள்​ளா​யினர்.

அதி​கபட்​ச​மாக சென்னை பாரி​முனை​யில் 36 செமீ, எண்​ணூர் கத்​தி​வாக்​கத்​தில் 34 செமீ மழை பதி​வானது. பெரம்​பூர், வியாசர்​பாடி, வேளச்​சேரி, தாம்​பரம் உள்​ளிட்ட பெரும்​பாலான தாழ்​வான பகு​தி​களில் வெள்​ளநீர் தேங்​கியது.

கணேசபுரம் சுரங்​கப்​பாலம், வியாசர்​பாடி சுரங்​கப் பாலப் பகு​தி​களி​லும் வெள்​ளநீர் தேங்​கியது. வேளச்​சேரி பகு​தி​யில் பேரிடர் மீட்பு படை​யினர் முகாமிட்​டுள்​ளனர்.

மாநக​ராட்சி சார்​பில் 215 நிவாரண மையங்​கள், 111 பொதுச் சமையலறை​கள் தயார் நிலை​யில் உள்​ளன. பால், மாவு, அரிசி, அத்​தி​யா​வசி​யப் பொருட்​கள் மற்​றும் சுகா​தா​ரத் துடைப்​பாடைகள் அடங்​கிய அவசர​காலக் கரு​விப் பெட்​டகங்​கள் முன்​கூட்​டியே கொள்​முதல் செய்​யப்​பட்​டுத் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளன.

வெள்​ளநீர் தேங்​கிய பகு​தி​களில் பொது​மக்​களுக்கு மாநக​ராட்சி சார்​பில் 3 வேளை​யும் உணவு வழங்​கப்​பட்​டது.

1000-க்​கும் மேற்​பட்ட ராட்சத மோட்​டார் பம்​பு​கள், டிராக்​டரில் பொருத்​தப்​பட்ட நீர் இறைக்​கும் இயந்​திரங்​கள் தயார் நிலை​யில் உள்ள நிலை​யில், தேவை​யான இடங்​களில் மோட்​டார்​களை பயன்​படுத்தி வெள்​ளநீர் வெளி​யேற்​றப்​பட்​டது.

நகராட்சி நிர்​வாகத்​துறை செயலர் ககன்​தீப் சிங் பேடி, மின் வாரி​யத் தலை​வர் ராஜேஷ் லக்​கானி, மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உள்​ளிட்​டோர் சென்​னை​யில் பல்​வேறு பகு​தி​களில் கள ஆய்​வில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இது தொடர்​பாக வரு​வாய்த்​துறை அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “சென்​னை​யில் 36 செமீ மழை பெய்​தும்​கூட எங்​கும் மழைநீர் தேங்​காத அளவுக்கு தமிழக அரசு பணி​யாற்​றி​யுள்​ளது. இது​வரை உயிர் சேதம் ஏதும் ஏற்​பட​வில்​லை.

சென்​னை​யில் தேவை​யான அளவு நிவாரண மு​காம்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. அங்கு பொது​மக்​கள் தங்​கு​வதற்கு தேவை​யான அடிப்​படை வசதி​கள்​ செய்​யப்​பட்​டுள்​ளன” என்​றார்​.

13,500 உணவு பொட்​டலங்​கள்

மழை பாதிப்பு தொடர்​பாக கட்​டுப்​பாட்டு அறைக்கு வந்த 40 அழைப்​பு​கள் மீதும் தீர்​வு​காணப்​பட்​டன. மாநக​ராட்சி சமூகவலைத்​தளம், 1,913 புகார் எண் மூல​மாக 583 புகார்​கள் வந்​தன. அவற்​றின் மீது நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது.

நேற்று இரவு வரை 13,500 உணவு பொட்​டலங்​கள் வழங்​கப்​பட்​டன. விழுந்த 50 மரங்​கள் உடனுக்​குடன் வெட்டி அகற்​றப்​பட்​டன. அனைத்து சுரங்​கப்​பாதைகளி​லும் நீர் அகற்​றப்​பட்​டு, மக்​கள் பயன்​பாட்​டில் உள்​ளது.

133 படகு​கள் தயார் நிலை​யல் உள்​ளன. 217 நிவாரண மையங்​கள், 102 சமையல் கூடங்​கள் தயார் நிலை​யில உள்ள நிலை​யில், 9 மையங்​கள் பயன்​பாட்​டில் உள்​ளன. தற்​போது மழை நிவாரணப் பணி​யில் 22 ஆயிரம் மாநக​ராட்சி பணி​யாளர்​கள் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here