பைக் ரேஸ், சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள் எதிர்காலத்தை தொலைக்க வேண்டாம்: எச்சரிக்கும் போக்குவரத்து போலீஸார்

0
24

 இன்​ஸ்​டாகி​ராமில் ரீல்ஸ் பதி​விட்டு அதிக லைக்​கு​களை அள்ள வேண்​டும்; நண்​பர்​கள் மத்​தி​யில் ஹீரோ​வாக வலம் வர வேண்​டும் என்ற ஆசை​யில், பொது சாலைகளில் பைக் ரேஸ் மற்​றும் ஆபத்​தான சாகசங்​களில் ஈடு​படும் இளைஞர்​களின் எண்​ணிக்கை அதி​கரித்து வரு​வ​தாக புகார்​கள் எழுந்​துள்​ளன.

எனவே, இது​போன்ற செயல்​களில் ஈடு​பட்டு இளைஞர்​கள், மாணவர்​கள் எதிர்​காலத்தை தொலைக்க வேண்​டாம் என சென்னை போக்​கு​வரத்து போலீ​ஸார் எச்​சரித்​துள்​ளனர்.

இன்​ஸ்​டா​வில் பதி​விடு​வதற்​காக சாகசம்: சென்​னை​யில் அண்​ணா​சாலை, கிழக்கு கடற்​கரைச் சாலை, பூந்​தமல்லி நெடுஞ்​சாலை, அடை​யாறு உள்​ளிட்ட பல்​வேறு முக்​கிய சாலைகளில் இளைஞர்​கள் சிலர் அவ்​வப்​போது பைக் ரேஸ் மற்​றும் சாகசங்​களில் ஈடு​படு​கின்​றனர்.

குறிப்​பாக, இரவு நேரங்​களில் சாலைகளில் அதிவேக​மாக பைக்​கு​களை ஓட்​டிச் செல்​வது, முன்​சக்​கரத்​தைத் தூக்​கியபடி வாக​னம் ஓட்​டு​வது, வாக​னங்​களுக்கு இடையே புகுந்து செல்​வது, ஆபத்​தான முறை​யில் வளைத்​து, நெளிந்து ஓட்​டு​வது போன்ற செயல்​களில் ஈடு​படு​கின்​றனர்.

இதனை நண்​பர்​கள் வீடியோ​வாக பதிவு செய்​து, இன்​ஸ்​டாகி​ராம் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களில் பதி​விடு​கின்​றனர். அதிக பார்​வை​கள், லைக்​கு​கள் கிடைக்க வேண்​டும் என்​ப​தற்​காக சிலர் ஆபத்​தின் எல்​லைக்கே சென்று சாகசங்​களில் ஈடு​படு​கின்​றனர்.

ஆனால், சாகசம் செய்​யும்​போது சிறிது கவனம் சிதறி​னாலும் வாக​னத்​தின் கட்​டுப்​பாட்டை இழந்து விபத்​தில் சிக்​கும் அபா​யம் உள்​ளது. சாலை​யில் செல்​லும் மற்ற வாகன ஓட்​டிகள், பாத​சா​ரி​கள் என அப்​பாவி​களும் இதனால் பாதிக்​கப்​படலாம். சில நொடிகள் கிடைக்​கும் புகழுக்​காக உயிரையே பணயம் வைக்​கும் இந்த செயல்​கள் விபரீதத்​தில் முடி​யும் ஆபத்து உள்​ளது.

855 நவீன கேம​ராக்​கள் கண்​காணிப்​பு: பைக் ரேஸ் மற்​றும் சாகசங்​களில் ஈடு​படும் இளைஞர்​கள், சாலைகளில் பொருத்​தப்​பட்​டுள்ள கண்​காணிப்பு கேம​ராக்​களை மறந்து விடு​கின்​றனர். சென்​னை​யில் போக்​கு​வரத்து விதி​மீறல்​களைக் கண்​டறிந்து நடவடிக்கை எடுக்​கும் வகை​யில், 119 இடங்​களில் 855 கேம​ராக்​கள் பொருத்​தப்​பட்​டுள்​ளன.

ஐடிஎம்​எஸ் எனப்​படும் நுண்​ணறிவு போக்​கு​வரத்து மேலாண்மை அமைப்​பின் கீழ் செயல்​படும் நவீன கேம​ராக்​கள், போக்​கு​வரத்தை கண்​காணிப்​பதுடன், சிவப்பு சிக்​னலை மீறு​தல், அதிவேக​மாக வாக​னம் ஓட்​டு​தல் உள்பட அனைத்து வகை​யான விதி​மீறல்​களை​யும் கண்​டறிய உதவு​கின்​றன.

ஏஎன்​பிஆர் எனப்​படும் தானி​யங்கி வாக​னப் பதிவு எண் அங்​கீ​காரத் தொழில்​நுட்​பம் மூல​மும் விதி மீறல் வாகன ஓட்​டிகள் அடை​யாளம் காணப்​படு​கின்​றனர். சில கேம​ராக்​கள் தானி​யங்கி முறை​யில் விதி​மீறல்​களைப் பதிவு செய்து அபராத நடவடிக்​கைக்கு உதவு​கின்​றன.

மற்ற கேம​ராக்​களில் பதி​வாகும் காட்​சிகளை போக்​கு​வரத்து போலீ​ஸார் கட்​டுப்​பாட்டு அறை​யில் இருந்​த​படி ஆய்வு செய்​து, விதி​மீறல்​களுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்​கின்​றனர். இதுத​விர, சாலைகளில் பணி​யில் இருக்​கும் போக்​கு​வரத்து போலீ​ஸாரும் விதி​மீறல்​களைக் கண்​டறிந்து அபராதம் விதிக்​கின்​றனர்.

73 பேர் கைது: பைக் ரேஸ் தொடர்​பாக கடந்த ஜன.1-ம் தேதி முதல் அக்.​ 7-ம் தேதி வரை 24 வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன. இந்த வழக்​கு​களில் இளைஞர்​கள், கல்​லூரி மற்​றும் பள்ளி மாணவர்​கள் என 73 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். மேலும், 67 வாக​னங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன.

போக்​கு​வரத்து விதி​மீறல்​கள் தொடர்​பாக​வும் போக்​கு​வரத்து போலீ​ஸார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வரு​கின்​றனர். கடந்த 10 மாதங்​களில் எதிர்​திசை​யில் வாக​னம் ஓட்​டு​தல், ஹெல்​மெட் அணி​யாமல் செல்​லுதல், ஒரே பைக்​கில் 3 பேர் பயணம் செய்​தல், அதிவேக​மாக வாக​னம் ஓட்​டு​தல், சீட் பெல்ட் அணி​யாமல் கார் ஓட்​டு​தல், செல்​போனில் பேசி​யபடி வாக​னம் ஓட்​டு​தல், சிக்​னலை மீறு​தல் உள்​ளிட்ட விதி​மீறல்​களுக்​காக மொத்​தம் 5 லட்​சத்து 71 ஆயிரத்து 973 வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன.

எதிர்​காலத்தை தொலைக்க வேண்​டாம்: இதுகுறித்து சென்னை போக்​கு​வரத்து காவல் கூடு​தல் ஆணை​யர் சாமுண்​டீஸ்​வரி கூறுகை​யில் “சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் வழி​காட்​டு​தல்​படி போக்​கு​வரத்து போலீ​ஸார் ஒருங்​கிணைந்து செயல்​பட்டு வரு​கின்​றனர்.

இளைஞர்​கள் விளை​யாட்​டாக பைக் ரேஸ் மற்​றும் சாகசங்​களில் ஈடுபட வேண்​டாம். கேம​ராக்​கள் மூலம் விதி​மீறல்​கள் பதிவு செய்​யப்​படு​வதுடன், போலீ​ஸாரும் தொடர்ந்து கண்​காணித்து வரு​கின்​றனர். விதி​மீறல்​களில் ஈடு​படு​வோர் மீது வழக்​குப்​ப​திவு செய்​து, சட்​டப்​படி நடவடிக்கை எடுக்​கப்​படும்.

குறிப்​பாக, மாணவர்​கள் இது​போன்ற செயல்​களில் ஈடு​பட்டு வழக்​கு​களில் சிக்​கி​னால், அவர்​களின் கல்வி மற்​றும் எதிர்​கால வேலை​வாய்ப்​பு​கள் பாதிக்​கப்​படக்​கூடும். பெற்​றோர்​களும் தங்​கள் பிள்​ளை​களுக்கு வாக​னங்​களை வழங்​கும்​போது கவன​மாக இருக்க வேண்​டும். அவர்​கள் வாக​னங்​களை எவ்​வாறு பயன்​படுத்​துகிறார்​கள் என்​ப​தைக் கண்​காணிக்க வேண்​டும்.

இன்​ஸ்​டாகி​ராமில் லைக்​கு​களை​யும் பார்​வை​களை​யும் பெறு​வதற்​காக மாணவர்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்​டாம். பைக் ரேஸில் ஈடு​பட்டு எதிர்​காலத்​தைத் தொலைக்​காதீர்​கள். உங்​கள் உயிருக்​கும்​ மற்​றவர்​களின்​ உயிருக்​கும்​ மதிப்​பளி​யுங்​கள்​. பெற்​றோருக்​கும்​ குடும்​பத்​தினருக்​கும்​ வேதனையை ஏற்​படுத்​த வேண்​டாம்” என்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here