மிஷ்கின் – விஜய் சேதுபதியின் ‘ட்ரெயின்’ டிச.4-ல் ரிலீஸ்

0
21

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ட்ரெயின்’ திரைப்படம் டிசம்பர் 4 அன்று திரைக்கு வர இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம் ‘ட்ரெயின்’. கடந்த 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படம் பல்வேறு காரணங்களால் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், இப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

இது குறித்த தகவலை விஜய் சேதுபதி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘பயணத்துக்கு தயாராகுங்கள். ‘ட்ரெயின்’ படம் உலகெங்கும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் படம் குறித்து மிஷ்கின் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, ‘ரயிலை ஒவ்வொருமுறை பார்க்கும்போது ஒரு ராட்சஷ புழு தன் வயிற்றில் குட்டிகளை ஏற்றிச் சென்று வேறு ஒரு இடத்தில் துப்புவது போலிருக்கும். 

இப்படியான ஒரு பயணத்தில் ஓர் ஆயிரம் மனிதர்கள் அந்த ராட்சஷ புழுவின் வயிற்றில் ஏறி வேறு ஒரு இடத்தில் போய் இறங்குகிறார்கள். அதில் சிலர் இறக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் இருக்கும் கதாநாயகன் வாழ்க்கையை வெறுத்து தன் மனைவியின் சமாதியின் சிறிய செடி ஒன்றை வைத்துவிட்டு அந்த ரயிலில் ஏறுகிறான்.

அப்படி ஏறுபவன் அந்த புழுவின் வயிற்றில் நடக்கும் பல விஷயங்களில் அவனும் தன்னை மறந்து ஈடுபடுகிறான். அவன் மீண்டும் இறங்கும்போது அந்தப் பயணம் அவனுக்கு வாழ்க்கையை கற்றுத் தருகிறது என்பது படத்தின் முடிவு’ என்று தெரிவித்திருந்தார்.

வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் ஸ்ருதி ஹாசன், நாசர், டிம்பிள் ஹயாதி, ஜெயராம், நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு மிஷ்கினே இசை அமைத்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here