டென்மார்க்கின் ஓடென்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்றுள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, உலகின் முதல் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான தென் கொரியாவின் அன் சே யங்குடன் மோதுகிறார்.
31 வயதாகும் பி.வி.சிந்து, அன் சே யங்குடன் கடைசியாக மோதிய 10 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளார். இதனால் இம்முறை சிந்து கடுமையான சவாலை எதிர்கொள்ளக்கூடும்.
சிந்துவுடன் மகளிர் பிரிவில் தன்வி சர்மா, அஷ்மிதா சாலிஹா, தேவிகா சிஹாக், உன்னதி ஹூடா ஆகியோரும் பங்கேற்கின்றனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் லக் ஷயா சென், ஆயுஷ் ஷெட்டி, கிடாம்பி காந்த் ஆகியோர் பங்கேற்கின்றனர். ஆடவர் இரட்டையர் பிரிவில் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியும், மகளிர் இரட்டையர் பிரிவில் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடியும் களமிறங்குகிறது.














