நே​பாளத்​தில் மீண்​டும் திடீர் வெள்ளப்​பெருக்கு: வீடு​கள், பாலங்கள் அடித்​துச் செல்லப்பட்டு பெரும் சேதம்

0
16

நேபாளத்​தில் மீண்​டும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்​டுள்​ளது. இதனால், வீடு​கள், பாலங்​கள் அடித்​துச் செல்லப்பட்டு மீண்​டும் பெருத்த சேதம் ஏற்​பட்​டுள்​ளது.

நேபாள நாட்​டின் கோர்க்கா மாவட்​டத்​தில் நேற்று திடீர் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டது. இதில், 35-க்​கும் மேற்​பட்ட வீடு​களும், பாலங்களும் அடித்​துச் செல்​லப்​பட்​டன. மேலும், அங்கு கட்டப்பட்டு வரும் நீர்​மின் திட்​டப் பகு​தி​யும் பலத்த சேதமடைந்துள்​ளது. சில மாதங்​களுக்கு முன் நேபாளத்​தில் ஆயிரக்​கணக்​கானோரின் உயிரைப் பலி​கொண்ட பெரும் பேரிடரின் வடுக்​கள் முழு​மை​யாக மறை​யாத நிலை​யில், தற்போது மீண்​டும் அங்கு ஒரு வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ளது.

குறிப்​பாக, திரிசூலி நதி​யின் கிளை நதி​யான புதி கண்​டகி நதியில் நீர்​மட்​டம் திடீரென உயர்ந்​த​தால், கோர்க்கா மாவட்டத்தின் சும்​னுப்ரி கிராமத்​தில் பலத்த வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டது. அதி​காரி​கள் மேற்​கொண்ட தீவிர நடவடிக்​கைகளால் 50 பேர் உடனடி​யாக மீட்​கப்​பட்​டனர். இருப்​பினும், குறைந்​தது 10 பேர் வரை மாய​மாகி​யுள்​ள​தாக தெரிகிறது. உயி​ரிழப்​பு​கள் குறித்து உடனடி​யாக தகவல் ஏதும் இல்​லை.

சல்​லேரி, பய்​யுகா மற்​றும் ஜகத் நதிக்​கரைப் பகு​தி​களில் உள்ள வீடு​கள் மற்​றும் தொங்​கு​ பாலங்​கள் வெள்​ளத்​தில் அடித்​துச் செல்லப்​பட்​டன. அங்​குள்ள 341 மெகா​வாட் புதி கண்​டகி நீர்​மின் திட்​டத்​தின் கட்​டு​மான முகா​மும் சில உபகரணங்​களும் சேதமடைந்​தன. மனாஸ்லு மலை​யேற்​றப் பகு​திக்​குச் சென்ற சுற்றுலாப் பயணி​கள் பலரும் பாலங்​கள் அடித்​துச் செல்லப்பட்டதால் வழி​யிலேயே தற்​காலிக தங்​குமிடங்​களில் தஞ்சமடைந்​துள்​ளனர்.

நேபாள ராணுவம் தரை மற்​றும் வான்​வழி மீட்​புப் பணி​களில் முழு​மை​யாகக் களமிறக்​கப்​பட்​டுள்​ளது. 4 ஹெலி​காப்​டர்​கள் மற்​றும் தரைப்​படை வீரர்​கள் மூலம் பாதிக்​கப்​பட்ட பகு​தி​களில் இருந்து சிக்​கிய​வர்​கள் மீட்​கப்​பட்​டுப் பாது​காப்​பான இடங்​களுக்கு அழைத்​துச் செல்​லப்​பட்டு வரு​கின்​றனர். இந்த வெள்​ளப்​பெருக்கு கனமழை​யால் ஏற்​பட​வில்லை என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது.

முதற்​கட்​டத் தகவல்​கள் மற்​றும் செயற்​கைக்​கோள் படங்​களின் அடிப்​படை​யில், நதி​யின் மேல் பகு​தி​யில் நிலச்​சரிவு ஏற்​பட்டு நதிநீர் தற்​காலிக​மாகத் தடை​யாகி, பின் அந்​தத் தடை திடீரென உடைந்து பெருக்​கெடுத்து ஓடி​யிருக்​கலாம் எனக் கருதப்படுகிறது. இதற்​கான காரணங்​கள் குறித்து அதி​காரி​கள்​ தீவிர வி​சா​ரணை நடத்தி வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here