விளையாட்டு மைதானத்தில் மது அருந்தியதை தடுத்தவருக்கு அடி உதை

0
327

நித்திரவிளை அருகே கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சுதீஷ் (24) இவர் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி செய்து வருகிறார். சம்பவ தினம் மாலை இவர் பூத்துறையில் உள்ள கால் பந்தாட்ட மைதானத்தில் விளையாட சென்றார். அங்கு அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதரன் (24), சகாயம் (24), ஜான் ஜெபின் (21) ஆகியோர் மைதானத்தின் பக்கவாட்டில் உட்கார்ந்து மது அருந்தி கொண்டிருந்ததார்களாம்.   

இதை பார்த்த சுதீஷ் விளையாட்டு மைதானத்தில் மது அருந்தக்கூடாது என்று எச்சரித்துள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து சுதீஷை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த சுதீஷ் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து ஜான் ஜெபின் என்பவரை கைது செய்தனர். மற்றவர்களை  தேடி வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here