ஆஸ்திரேலியாவில் இளையராஜாவுக்கு தபால் தலை வெளியீடு

0
22

இசைஞானி இளையராஜா​வின் 50 ஆண்டு கால இசை பயணத்தை பாராட்டி ஆஸ்​திரேலி​யா​வின் விக்​டோரியா மாகாண அரசு சார்​பில் நேற்று அவருக்கு சிறப்பு தபால் தலை வெளி​யிடப்​பட்​டது.

இசைஞானி இளை​ய​ராஜா தற்​போது ஆஸ்​திரேலி​யா​வின் பல்வேறு நகரங்​களில் இசைக் கச்​சேரி​களை நடத்தி வரு​கிறார். இந்த சூழலில் விக்​டோரியா மாகாண அரசு சார்​பில் மெல்​போர்ன் நகரில் உள்ள “பார்​லிமென்ட் ஆப் விக்​டோரி​யா” (சட்​டப்​பேர​வை) அவை​யில் இசைஞானி இளை​ய​ராஜாவுக்கு நேற்று பாராட்டு விழா நடை​பெற்​றது. அப்​போது அவரின் 50 ஆண்டு கால இசை பயணத்தை பாராட்டி விக்​டோரியா மாகாண அரசு சார்​பில் சிறப்பு தபால் தலை வெளி​யிடப்​பட்​டது.

மாகாண நிதித் துறை அமைச்​சர் என்​வர் எர்​டோகன் சிறப்பு தபால் தலையை வெளி​யிட இசைஞானி இளை​ய​ராஜா பெற்​றுக் கொண்​டார். ஆஸ்​திரேலிய தமிழ் வர்த்தகசபை (விக்டோரியன் சாப்டர்) பொதுச்​செய​லா​ளர் மிதுன் ராஜன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழா​வில் இசைஞானி இளை​ய​ராஜா பேசி​ய​தாவது:

எனது 50 ஆண்டு கால இசைப் பயணத்தை கவுர​வித்து சிறப்பு அஞ்​சல் தலை வெளி​யிட்ட விக்​டோரியா மாகாண அரசின் நிதியமைச்​சர் என்​வர் எர்​டோகன், விக்​டோரியா அவை​யின் உறுப்​பினர்​கள் அனை​வருக்​கும் மனதார நன்​றியைத் தெரிவித்துக்​கொள்​கிறேன்.

என்​னுடைய இசைக்கு உயிர் கொடுத்த மக்​கள், என்​னுடன் இணைந்து பயணித்த கலைஞர்​கள், எனது பாடல்​களை ரசித்​துக்​கொண்​டிருக்​கும் அனைத்து தலை​முறை​யினருக்​கும் நன்​றியை தெரி​வித்​துக் கொள்​கிறேன். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here