வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு ஊழியர் மீது வழக்கு பதிவதற்கு முன்பு நிர்வாக ரீதியான விசாரணை கட்டாயம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

0
21

எஸ்​சி, எஸ்டி வன்கொடுமைகள் தடுப்பு சட்​டத்​தின் கீழ் அரசு ஊழியர் மீது வழக்கு பதிவதற்கு முன் நிர்​வாக ரீதி​யாக கட்​டா​யம் விசா​ரணை நடத்த வேண்​டும் என உச்ச நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது.

திருச்சி மாவட்​டம் புத்​தாநத்​தம் பகு​தி​யில் நில ஆக்​கிரமிப்பு புகார் தொடர்​பான வழக்கை விசா​ரித்த சிறப்பு நீதி​மன்​றம், காவல் அதி​காரி​கள் கடமை தவறிய​தாகக் கூறி எஸ்​சி, எஸ்டி வன்​கொடுமை தடுப்பு சட்​டத்​தின் பிரிவு 4-ன் கீழ் எஃப்​ஐஆர் பதிவு செய்ய உத்​தர​விட்​டது.

இதை சென்னை உயர் நீதி​மன்ற மதுரை கிளை உறுதி செய்​தது. இதற்கு எதி​ராக காவல் அதி​காரி​கள் தரப்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது.

இவ்​வழக்கை விசா​ரித்த நீதிப​தி​கள் ஜே.பி.​பார்​தி​வாலா மற்​றும் கே.​வினோத் சந்​திரன் அடங்​கிய அமர்​வு, சட்​டப் பிரிவு​களை விரி​வாகச் சுட்​டிக்​காட்டி தீர்ப்​பளித்​துள்​ளது.

அதில், எஸ்​சி. எஸ்டி வன்​கொடுமை சட்​டப் பிரிவு 4-ன் கீழ் அரசு ஊழியர் மீது கடமை தவறிய குற்​றத்​துக்​காக எஃப்​ஐஆர் பதிவு செய்ய வேண்​டுமென்​றால், அதற்கு முன் தகு​தி​யான அதி​காரி​யால் நடத்​தப்​படும் நிர்​வாக விசா​ரணை அறிக்கை சட்​டப்​பூர்​வ​மாகக் கட்​டாய​மாகும் என தெளிவுபடுத்​தி​யுள்​ளனர்.

மேலும் நிர்​வாக ரீதியி​லான விசா​ரணை ஏது​மின்றி சிறப்பு நீதி​மன்​றம் நேரடி​யாக எஃப்​ஐஆர் பதிவு செய்ய உத்​தர​விட்​டது தெளி​வான சட்​டப் பிழை எனக் குறிப்​பிட்ட நீதிப​தி​கள், வழக்கை மீண்​டும் விசா​ரணைக்கு அனுப்​பக் கோரிய தமிழக அரசின் கோரிக்​கையை நிராகரித்​தனர்.

திருச்சி மாவட்​டம் புத்​தா நத்​தம் காவல் நிலை​யத்​தில் டிஎஸ்பி மற்​றும் எஸ்ஐ ஆகியோ​ருக்கு எதி​ராக பதிவு செய்​யப்​பட்ட எஃப்​ஐஆர் மற்​றும் அதன் தொடர்ச்​சி​யான அனைத்து நடவடிக்​கைகளை​யும் முற்​றி​லும் ரத்து செய்து நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here