பிரதமர் மோடி​யின் ஃபிட்னஸ் ரகசியம்: முருங்​கைக்​கீரை ரொட்டி, யோகா, உடற்பயிற்சி!

0
19

பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 76-வது பிறந்​த​நாளை கொண்​டாடி​னார். இந்த வயதி​லும் அவர் நல்ல உடல் ஆரோக்​கி​யத்​துட​னும், மிக​வும் சுறுசுறுப்​பாக​வும் வேலை செய்து வரு​கிறார்.

இதற்கு காரணம் அவரின் யோகா மற்​றும் உடற்​ப​யிற்சி பழக்கங்கள். அவரது உடல்​நலம் குறித்த உரை​யாடல்​களில் இதுவே பிர​தான​மாக இருக்​கும். அதே​நேரம் அவரின் உணவுப் பழக்கங்​களும் இதில் முக்​கிய​மானவை. அவை மிக​வும் எளிமையானவை. அவரது உணவு​களை வரையறுக்​கும் விரி​வான உணவு அட்​ட​வணை (சூப்​பர் டயட்) எது​வும் இல்​லை.

கடந்த 2020-ல் ஊட்​டச்​சத்து நிபுணர் ருஜுதா திவேகருடன் ‘ஃபிட் இந்​தி​யா’ கலந்​துரை​யாடல் நடை​பெற்​றது. அப்​போது, முருங்கை இலைகளை கொண்டு செய்​யப்​படும் ரொட்​டிகளை வாரத்​துக்கு ஒன்று அல்​லது இரண்டு முறை சாப்​பிடு​வ​தாக அவர் கூறி​னார். முருங்​கை​யில் நார்ச்​சத்​து, வைட்​ட​மின்​கள் மற்​றும் தாதுக்​கள் உள்​ளிட்ட ஊட்​டச்​சத்​துகள் நிறைந்​துள்​ளன.

அதே உரை​யாடலின் போது, “மஞ்​சள் உட்​கொள்​கிறாயா என எனது தாய் அவ்​வப்​போது தவறாமல் கேட்​பார்” என்​றும் நினைவு கூர்ந்​தார். ரொட்​டி, காய்​கறி, பருப்​பு, சாதம், அவல் மற்​றும் உப்​புமா ஆகிய​வற்​றுடன் பிராந்​திய உணவு​களும் தனது உணவு பட்​டியலில் இடம்​பெற்​றுள்​ள​தாக மோடி குறிப்​பிட்​டார்.

மேலும் அந்த உரை​யாடலில், புதி​தாக சமைத்த உணவு​களை அதி​க​மாக உண்ண வேண்​டும், பொட்​டலங்​களில் அடைக்​கப்​பட்ட மற்​றும் பதப்​படுத்​தப்​பட்ட உணவு​களைக் குறைக்க வேண்​டும் என்​பதே அவரின் முக்​கியச் செய்​தி​யாக இருந்​தது.

பருப்​பு – சோறு மற்​றும் நெய்யை அவர் நவநாகரீக ஆரோக்​கிய உணவு​களாக முன்​வைக்​காமல், பாரம்​பரிய இந்​தி​யச் சமையலின் பரிச்​சய​மான அங்​கங்​களாகக் குறிப்​பிட்​டார். பிரதமர் மோடி​யின் சிறந்த உடல் ஆரோக்​கி​யத்​துக்கு அடிக்​கடி அவர் விரதம் இருப்​பதும் முக்​கியக் காரண​மாகும். நவராத்​திரி​யின் போது, 9 நாட்​களுக்கு உணவை முற்​றி​லு​மாகத் தவிர்த்​து, வெந்​நீரை மட்​டுமே அருந்​து​வ​தாக அவர் ஒரு உரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here