15 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயா டி.வி.யில் மீண்டும் ‘ஜாக்பாட்’

0
23

ஜெயா தொலைக்​காட்​சி​யில், 15 ஆண்​டு​களுக்கு முன் வெளி​யான குஷ்பு நடத்​திய ‘ஜாக்பாட்’ நிகழ்ச்​சி​யின் அடுத்த சீசன், நாளை (செப்​.13) முதல் தொடங்​கு​கிறது. இந்​நிகழ்ச்​சி​யை​யும் குஷ்பு நடத்​துகிறார்.

புதிய அரங்​கம், புத்​தம் புதிய சுற்​றுகள், எதிர்​பா​ராத சவால்​கள் என புது​மை​யும், விறு​விறுப்​பு​மாக அமைக்​கப்​பட்​டுள்ள இந்​நிகழ்ச்​சி, இந்த முறை​யும் 3 அணி​களுக்கு இடையி​லான போட்​டி​யாக உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. கணவன்​-மனை​வி, நண்​பர்​கள் என என்ன உறவாக இருந்​தா​லும் ஓர் அணி​யாக இணைந்து போட்​டி​யில் பங்​கேற்​கலாம். ஒவ்​வொரு சுற்​றி​லும் போட்​டி​யாளர்​களின் சவால் அதி​கரிக்​கும் வகை​யில் புது​மை​யான கேள்வி​கள், வேகத்​தைச் சோதிக்​கும் போட்​டிகள் என பல்​வேறு அம்​சங்​கள் இடம்​பெறுகின்​றன.

குழந்​தைகள் முதல் பெரிய​வர்​கள் வரை ரசிக்​கும் வகை​யில் இந்​தப் புதிய ஜாக்​பாட் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. இறு​தி​யில் ரூ.10 லட்​சம் வரை வெல்​லும் வாய்ப்​புடன் பல்​வேறு சிறப்​புப் பரிசுகளும் போட்​டி​யாளர்​களுக்கு வழங்​கப்பட இருக்​கின்​றன.

அது​மட்​டுமின்றி வீட்​டிலிருந்து நிகழ்ச்​சி​யைப் பார்க்​கும் பார்​வை​யாளர்​களும், வாட்ஸ் ஆப் மூலம் கேட்​கப்​படும் கேள்விக்​குப் பதிலளித்து பரிசுகளை வெல்​லலாம். இறு​திச் சுற்​றில் இடம்​பெறவுள்ள ஏ.ஐ தொழில்​நுட்​பத்​தைப் பயன்​படுத்​திய பிரத்​தி​யேக சவால், இந்​தப் புதிய ஜாக்​பாட்​டின் சுவாரஸ்​யங்​களில் ஒன்​றாக இருக்​கும் என்று அறிவிக்கப்​பட்​டுள்​ளது. இந்த ‘ஜாக்​பாட்’ நிகழ்ச்​சி, நாளை முதல் ஒவ்​வொரு ஞாயிற்​றுக்​கிழமை​யும் இரவு 8 மணிக்கு ஜெயா டிவி​யில் ஒளிபரப்​பாகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here