பிரிக்ஸ் உச்சி​ மாநாட்டில் வங்கதேச பிரதமர் பங்கேற்கமாட்டார்: அழைப்பு இல்லை என அமைச்​சர் தகவல்

0
22

டெல்லியில் செப்​டம்​பர் 12, 13-ல் நடக்​கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்​டிற்கு வங்​கதேச பிரதமருக்​குத் தனிப்​பட்ட முறையில் அழைப்பு வரவில்​லை.

பிம்​ஸ்​டெக் அமைப்​பின் தலை​வ​ராகவே அவருக்கு அழைப்பு வந்துள்​ளது என்று வங்​கதேச வெளி​யுறவு அமைச்​சர் ஹுமாயூன் கபீர் கூறி​யுள்​ளார். இதனால், பிரதமர் தா​ரிக் ரஹ்​மான் இம்​மா​நாட்​டில் பங்கேற்க மாட்​டார் என்​றும், அவருக்​குப் பதிலாக வேறொரு அரசு பிர​தி​நிதி கலந்​து​கொள்ள வாய்ப்​புள்​ள​தாக​வும் அவர் தெளிவுபடுத்​தி​யுள்​ளார்.

“நமது பிரதமருக்கு நேரடி அழைப்​பில்​லை. மேலும், அவரது முதல் இந்​தி​யப் பயணம் ஒரு பன்​னாட்டு மா​நா​டாக இருக்க முடி​யாது. தகுந்த சூழல் அமை​யும் போது இருதரப்​புப் பயணம் மேற்​கொள்​ளப்​படும்” என்று கபீர் கூறி​னார்.

கடந்த 2024 ஆகஸ்​டில் வங்​கதேச முன்​னாள் பிரதமர் ஷேக் ஹசீ​னா​வுக்கு இந்​தியா அரசி​யல் தஞ்சம் அளித்​த​தால் இரு நாடு​களுக்​குமிடையே பதற்​றம் நிலவி வருகிறது. இருப்​பினும், பிம்​ஸ்​டெக் தலை​வ​ராக பிரிக்​ஸ் சிறப்பு அழைப்​பாளர்​கள் கூட்​டத்​துக்கு ரஹ்​மானுக்கு அழைப்பு அனுப்பப்பட்​ட​தாக​ இந்​தியா தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here