ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சுகாதாரமின்றி செயல்பட்ட உணவகத்தின் உரிமம் ரத்து

0
18

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சுகாதாரம் இல்லாமல் செயல்பட்ட உணவகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தனியார் உணவகம், தேநீர் கடையில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, உணவகம் சுகாதாரம் இல்லாமலும், அசுத்தமாகவும் இருந்தது. இதையடுத்து, நோயாளிகளின் நலன் கருதி அந்த உணவகத்தின் உரிமத்தைஉடனடியாக ரத்து செய்த அதிகாரிகள், விற்பனை செய்வதற்கு தடை விதித்தனர்.

அதேபோல், சுகாதாரம் இல்லாமல் இருந்த தேநீர் கடைக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து, உடனடியாக குறைபாடுகளை சரிசெய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here