பூம்புகார் ஆழ்கடலில் 3-ம் கட்ட அகழாய்வு தொடக்கம்: ஸ்கூபா டைவ் அடித்து ஆய்வு செய்த அமைச்சர் ராஜ்மோகன்

0
19

பூம்​பு​காரில் ஆழ்​கடலில் ஸ்கூபாடைவ் அடித்து 3-ம் கட்ட அகழாய்வு பணியை பள்​ளிக் கல்வி மற்​றும் தொல்​லியல் துறை அமைச்​சர் ராஜ்மோகன் நேற்று தொடங்​கி​வைத்​தார்.

மயி​லாடு​துறை மாவட்​டம் பூம்​பு​காரில் பழந்​தமிழர் நாகரி​கத்​தின் தொன்​மையை கண்​டறி​யும் வகை​யில், தமிழ்​நாடு தொல்​லியல் துறை சார்​பில் இந்​திய கடல்​சார் பல்​கலைக்​கழகத்​தின் உதவி​யுடன் 2025 மற்​றும் 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்​தில் 2 கட்​டங்​களாக கடல்​சார் அகழாய்வு மேற்​கொள்​ளப்​பட்​டது.

இதில், கடலில் மூழ்​கிய பண்​டைய பூம்​பு​காரின் கட்​டிடங்​கள், சுற்​றுச்​சுவர், சாலை உள்​ளிட்ட கட்​டமைப்​பு​கள், பானை ஓடு​கள்,செங்​கற்​கள் கண்​டறியப்​பட்​டதுடன், 17-ம் நூற்​றாண்​டைச் சேர்ந்த கப்​பல் ஒன்​றும் கண்​டறியப்​பட்​டது.

இந்​நிலை​யில், தமிழக அரசின் உத்​தர​வின்​படி பூம்​பு​கார் கடற்​கரை​யில் இருந்து 6 கி.மீ. தொலை​வில் ஆழ்​கடல் பகு​தி​யில் 3-ம் கட்ட அகழாய்​வுப் பணி​கள் நேற்று தொடங்​கின. தமிழக பள்​ளிக் கல்வி மற்​றும் தொல்​லியல் துறை அமைச்​சர் ராஜ்மோகன், தொல்​லியல் துறை இயக்​குநர் ஜெயசீலன் ஆகியோர், ஆழ்​கடலில் ஸ்கூபா டைவ் முறை​யில் இறங்கி 3-ம் கட்ட அகழாய்வுப் பணி​களை தொடங்​கி​வைத்​து, நேரில் பார்​வை​யிட்​டு, ஆய்வு செய்​தனர்.

தொடர்ந்​து, கடல்​சார் ஆராய்ச்சி ஆலோ​சகர் பேராசிரியர் ராஜன் தலை​மை​யில் தொல்​லியல் துறை இணை இயக்​குநர் யதீஷ்கு​மார், ஓய்​வு​பெற்ற இணை இயக்​குநர் சிவானந்​தம், தொல்​லியல் துறை அலு​வலர் வசந்​தகு​மார் மற்​றும் ஸ்கூபா டைவர்ஸ் என 25 பேர் கொண்ட குழு​வினர், ஒரு விசைப்​படகு, 2 பைபர் படகு​களில் அதிநவீன டைவிங் கருவி​கள், நீருக்​கடி​யில் பயன்​படுத்​தும் கேமரா உள்​ளிட்ட உபகரணங்​களு​டன் கடலுக்​குள் சென்று ஆய்வு மேற்​கொண்​டனர்.

பின்​னர், பூம்​பு​கார் துறை​முகத்​தில் அமைச்​சர் ராஜ்மோகன் செய்​தி​யாளர்​களிடம் கூறியது: கலைப் பொக்​கிஷங்​கள் வரலாற்​றில் பூம்​பு​கார் தனி​யிடம் பெற்​றுள்​ளது. அகழாய்​வின்​போது தமிழர்​கள் பயன்​படுத்​திய பானை ஓடு​கள், வெளி​நாட்​டின் பானை ஓடு​கள் தென்​பட்​டன. பல நாடு​களின் பானை ஓடு​கள் இருப்​ப​தால், இது வணிக நகரம், பண்​பாட்டு நகரம், கலைநகரம், மாபெரும் பொக்​கிஷ​மான நகர​மாக தெரி​கிறது.

கடலுக்​கடி​யில் கட்​டு​மானச் சுவர்​கள், உறை​கிணறுகள் தென்​பட்​டுள்​ளன. பல்​லா​யிரம் ஆண்​டு​களாக தமிழர்​கள் வாழ்ந்​ததற்​கும், இங்கு வணி​கம் நடந்​ததற்​கும் ஆதா​ரச் சான்​றுகள் கிடைத்​திருக்​கின்​றன. பூம்​பு​காரில் கடல்​சார் அகழாய்வு தொடரும்.

உலகத்​துக்கே நாகரி​கத்தை கற்​றுத்​தந்​தவர்​களாக தமிழர்​கள் இருந்​தார்​கள் என்ற உண்மை வெளிவரும். சிந்து சமவெளி விட்ட இடமும், சங்க இலக்​கி​யம் தொட்ட இடமும் ஒன்​று​தான் என்​பதை நிரூபிக்​கும் வகை​யில், தொட்​டு​விடும் தொலை​வில் உள்​ளோம். பூம்​பு​கார் உலக அளவில் ஜொலிக்​கும் என தெரி​வித்​தார்.

மேலும், “மழை​யில் நெல் மூட்​டைகள் நனைந்த விவ​காரம் தொடர்​பாக சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களிடம் பேசி விரை​வாக நடவடிக்கை எடுக்​கப்​படும். தற்​காலிக ஆசிரியர்​களின் கோரிக்​கைகள் நிறைவேற்​றப்​படும். தனி​யார் பள்​ளி​கள் கட்டண விவரங்​களை வெளிப்​படை​யாக அறிவிக்க வேண்​டும்.

இதைக் கண்​காணிக்க ஓய்​வு​பெற்ற நீதிபதி தலை​மை​யில் குழு அமைக்க நடவடிக்கை எடுக்​கப்​படும்” எனவும் அமைச்​சர் தெரி​வித்​தார். தவெக மாவட்​டச் செய​லா​ளர் கோபி​நாத் மற்​றும் கட்சி நிர்​வாகி​கள் உடனிருந்​தனர். கடலில் படகுப் பயணம் மேற்​கொண்​ட​தில் அமைச்​சர் சோர்​வடைந்​த​தால், தரங்​கம்​பாடி பகு​தி​யில் ஆய்வு செய்​யும் பணி ரத்து செய்​யப்​பட்​டது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here