துலீப் டிராபியில் தேவ்தத் படிக்கல்?

0
21

துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி வரும் 6-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் தென் மண்டலம் – கிழக்கு மண்டலம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான அணியில் திலக் வர்மா, இளம் அதிரடி வீரரான வைபவ் சூர்யவன்ஷி, விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் 3 பேரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட உள்ள டி 20 தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ளனர். இதனால் இவர்களுக்கு ஓய்வு கொடுக்கும் விதமாக துலீப் டிராபி இறுதிப் போட்டியில் கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல், முகமது சிராஜ் ஆகியோர் பங்கேற்க வேண்டும் என பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் பயிற்சியாளர் கவுதம் காம்பீரின் ஒப்புதல் இதற்கு அவசியமாகி உள்ளது. கே.எல்.ராகுல் உள்ளிட்ட 3 பேரும் கடைசியாக ஆகஸ்ட் 27-ம் தேதி இலங்கைக்கு எதிராக விளையாடினார்கள். அடுத்ததாக இவர்கள் வரும் 27-ம் தேதி மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக தொடங்கும் ஒருநாள் போட்டித் தொடரில்தான் பங்கேற்க உள்ளனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here