‘பேங்க் ஆப் அமெரிக்கா’ வங்கியின் பெண் அதிகாரி கொலை – குற்றவாளியை சுட்டுக் கொன்ற போலீஸார்

0
23

மகப்​பேறு விடுப்பு முடிந்து பணிக்​குத் திரும்​பிய பேங்க் ஆப் அமெரிக்கா​வின் பெண் துணைத் தலை​வர் நியூ​யார்க் டைம்ஸ் சதுக்​கப் பகு​தி​யில் கத்​தி​யால் குத்​திக் கொல்​லப்​பட்​டார். தாக்​குதல் நடத்​திய மனநலப் பாதிப்​புள்ள பெண்​ணைக் காவல் துறை சுட்டு வீழ்த்​தி​யது.

அமெரிக்கா​வின் நியூஜெர்​சி​யைச் சேர்ந்த எரின் பியசெண்டி (32), பேங்க் ஆப் அமெரிக்கா வங்​கி​யின் துணைத் தலை​வ​ராகப் பணியாற்றி வந்​தார். மகப்​பேறு விடுப்பு முடிந்து பணிக்​குத் திரும்பிய இவர், நேற்று மேற்கு 42-வது தெரு சந்​திப்​பில் இருந்​தார். அப்​போது, பமேலா சிஸ்​நெரோஸ் (49) என்ற பெண் இரு பெரிய சமையலறைக் கத்​தி​களு​டன் அங்​கிருந்த பொது​மக்​கள் மீது திடீரெனத் தாக்​குதல் நடத்​தி​னார். இதில் எரின் பியசெண்டி படுகாயமடைந்து உயி​ரிழந்​தார்.

தகவலறிந்து சம்பவ இடத்​துக்​குச் சென்ற போலீ​ஸார், டேசர் (மின்சார அதிர்ச்​சித் துப்​பாக்​கி) மூலம் சிஸ்​நெரோஸைக் கட்டுப்படுத்த முயன்​றனர். ஆனால், அவர் கத்​தி​களு​டன் அதிகாரிகளை நோக்கி முன்​னேறிய​தால் போலீ​ஸார் நடத்​திய துப்​பாக்​கிச் சூட்​டில் அவர் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார்.

இதுகுறித்து நியூ​யார்க் காவல் துறை ஆணை​யர் ஜெசிகா டிஷ் கூறும்​போது, “இது எவ்​வித காரண​முமின்றி நடத்​தப்​பட்ட தாக்குதல். சிஸ்​நெரோஸுக்கு ஏற்​கெனவே மனநலப் பாதிப்​பு​கள் இருந்​த​தாகக் காவல் துறை​யின் பதிவு​கள் காட்​டு​கின்​றன” என்றார். இச்​சம்​பவம் குறித்து இரங்​கல் தெரி​வித்​துள்ள பேங்க் ஆப் அமெரிக்கா நிறு​வனம், “எங்​களது சிறந்த சக ஊழியரின் இழப்பு பெரும் அதிர்ச்​சி​யை​யும் வேதனையை​யும் அளிக்​கிறது” எனக் குறிப்​பிட்​டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here