வளைகுடா நாடுகள் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்

0
12

அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடி தரும் வித​மாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் ராணுவம் நேற்று மீண்டும் தாக்​குதலை தொடங்​கியது.

அமெரிக்​கக் கடற்​படைத் தளம் அமைந்​திருக்​கும் பஹ்ரைன் நோக்கி ஈரான் வன்​வழித் தாக்​குதலை நடத்​தி​யது. ஆனால், பஹ்ரைன் நாட்​டின் வான் பாது​காப்பு அமைப்பு இத்​தாக்​குதலை முறியடித்​த​தாகக் கூறி​யுள்​ளதுடன், பொது​மக்​கள் மீது ஈரான் தாக்குதல் நடத்​து​வ​தாகக் குற்​றம் சாட்​டி​யுள்​ளது.

அமெரிக்க ராணுவம், ஈரானிய ராணுவ இலக்​கு​கள் மீது நடத்​திய தாக்​குதலில் 18 பேர் கொல்​லப்​பட்​ட​தாகக் கூறப்​படும் நிலை​யில், இருதரப்​புக்​கும் இடையே மோதல் மேலும் தீவிரமடைந்​துள்​ளது. இதற்​குப் பதிலடி​யாக, பிராந்​தி​யத்​தில் உள்ள அமெரிக்க நிலைகள் மற்​றும் அதன் நட்பு நாடு​கள் மீது ஈரான் தாக்​குதல் நடத்தி வரு​கிறது.

கடந்த ஆறு மாதங்​களாக நீடிக்​கும் அமெரிக்​க-ஈ​ரான் மோதல் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்தி வழியி​லான கப்​பல் போக்​கு​வரத்து ஏற்​கெனவே பாதிக்​கப்​பட்​டுள்​ளது. குறிப்​பாக, உலகளா​விய கச்சா எண்​ணெய் விலையை உயரச் செய்து சர்​வ​தேசப் பொருளா​தா​ரத்​துக்​குப் பெரும் நெருக்​கடியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இந்த நிலை​யில், ஈரானின் இந்த தாக்​குதல் பதற்​றத்தை மேலும் அதி​கரிக்​கும் வித​மாக அமைந்​துள்​ளது.

பஹ்ரைன் மீதான தாக்குதலுக்கு முன்​பாக, ஈரான் ராணுவம் ஜோர்​டானை நோக்கி ஏவு​கணை​கள், குவைத்தை நோக்கி ட்ரோன்​களை ஏவிய​தாக​வும், அவை இடைமறிக்​கப்​பட்​ட​தாக​வும் அசோசி​யேட்​டட் பிரஸ் செய்தி நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது. ஐக்​கிய அரபு அமீரக​மும் திங்​களன்று தனது கடல் பகு​திக்கு மேல் வந்த ஈரானிய ட்ரோனைத் தடுத்து நிறுத்​தி​ய​தாகக் கூறி​யுள்​ளது.

ட்ரம்ப் கடும் எச்​சரிக்கை

ஈரான் மீண்​டும் தாக்​குதல் நடத்​தி​னால், அமெரிக்கா மிகக்கடுமை​யான அளவில் பதிலடி கொடுக்​கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்​சரித்​துள்ளார். ஈரானுடன் புதிய ஒப்​பந்​தம் செய்​வ​தில் தனக்கு ஆர்​வ​மில்லை என்​றும், ஹார்​முஸ் ஜலசந்தி மீதான கட்​டுப்​பாடு மற்​றும் ஈரானின் பொருளா​தார நெருக்​கடி காரண​மாக தற்​போது அமெரிக்கா வலு​வான நிலை​யில்​ உள்​ளது என்​றும்​ அவர்​ குறிப்​பிட்​டுள்​ளார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here