‘ஜெயிலர் 2’ ரிலீஸ் தேதியை உறுதி செய்த படக்குழு

0
20

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி அக்டோபர் 15-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு உறுதி செய்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘ஜெயிலர் 2’. இதில் ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மேக்னா ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். மோகன்லால், சிவ ராஜ்குமார் கவுரவ வேடத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் முதல் சிங்கிளான ‘அலே போலேலோ’ பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. படம் அக்டோபர் மாதம் வெளியாகும் எனப் படக்குழுவால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனிடையே, பல்வேறு காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிப் போகலாம் என்று ஊகங்கள் வெளியாகின. இந்தநிலையில், திட்டமிட்டபடி படம் அக்டோபர் 15-ம் தேதி திரைக்கு வரும் என்பதைப் படக்குழு மீண்டும் உறுதி செய்துள்ளது.

இது குறித்து சன் பிக்சர்ஸ் அதன் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவலில், ‘ஜெயிலர் 2 அக்டோபர் 15-ம் தேதி அலப்பறை கிளப்புறோம்’ என்று தெரிவித்துள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here