1,500 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணைகளை தயாரிக்க மத்திய அரசு திட்டம்

0
16

டிஆர்டிஓ தொழில்​நுட்​பத்​தைப் பயன்​படுத்தி மரபுசார் ஏவுகணைகளைத் தயாரிக்​கத் தனி​யார் துறைக்கு மத்திய அரசு அனு​மதி அளித்​தது.

இதைத் தொடர்ந்​து, 1,000 முதல் 1,500 கி.மீ. வரை​யில் உள்ள இலக்கைத் தாக்​கும் நீண்​டதூரத் தரைவழித் தாக்​குதல் க்ரூஸ் ஏவுகணை மற்​றும் 150 முதல் 500 கி.மீ. இலக்கை தாக்​கும் ‘பிரளய்’ ஏவு​கணை​களைத் தயாரிப்​ப​தற்​காக முன்​னணித் தனி​யார் நிறுவனங்​களை அடை​யாளம் காணும் பணி​யில் பிரதமர் மோடி தலை​மையி​லான மத்​திய அரசு தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளது.

முன்​ன​தாக, 110 கி.மீ. இலக்​கைத் தாக்​கும் அஸ்ட்ரா மார்க் மற்​றும் 150 கி.மீ. இலக்கை தாக்​கும் அஸ்ட்ரா மார்க் II ரக வான்​வழி ஏவு​கணை​களைத் தயாரிப்​ப​தற்​கான முன்​மொழி​வுக் கோரிக்​கைகள் தனி​யார் நிறு​வனங்​களுக்கு வழங்​கப்​பட்​டுள்​ளன.

இதன்​படி, ஹைத​ரா​பாத்​தைச் சேர்ந்த ஐகாம், பாரத் போர்​ஜ், அதானி டிஃபென்ஸ் சிஸ்​டம்​ஸ், பாரத் டைனமிக்ஸ் மற்​றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பொது மற்​றும் தனி​யார் துறை நிறுவனங்கள் அதிநவீன ஏவு​கணை​கள் மற்​றும் ஆயுத உற்பத்தியில் ஈடு​பட​வுள்​ளன.

மரபு​சார் ஏவு​கணை​களைத் தயாரிக்க தனி​யார் துறைக்கு அனுமதி வழங்​கப்​பட்​டிருப்​பது, எதிர்​காலத்​தில் உத்​தி​சார் ஏவுகணை துறையை​யும் தனி​யார் துறைக்​குத் திறப்​ப​தற்​கான முதல் படியாகப் பார்க்​கப்​படு​கிறது. தற்​போது ஏவு​கணை தயாரிப்புக்​குத் தேவை​யான 50-க்​கும் மேற்​பட்ட துணை அமைப்புகளை தனி​யார் துறை நிறு​வனங்​களே வழங்கி வருகின்றன.

இந்த முடி​வின் மூலம் ஏவு​கணை உற்​பத்​தி​யின் அளவு பெருமளவில் அதி​கரிப்​பதுடன், சுய​சார்பு இந்​தியா திட்​டத்​துக்​கும் நாட்​டின் ராணுவத் தொழில்​முறை கட்​டமைப்​புக்​கும் மிகப்​பெரிய பலம் கிடைக்​கும்​ என எதிர்​பார்க்​கப்​படுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here