கினியாவில் கனமழை: குப்பை மலை சரிந்து 22 பேர் உயிரிழப்பு

0
23

கினியாவில் கனமழை பெய்ததால் குப்பை மலை சரிந்து குடியிருப்புகள் மீது விழுந்ததில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேற்கு ஆப்​பிரிக்க நாடான கினி​யா​வின் தலைநகர் கொனாக்ரியில் டார் எஸ் சலாம் என்​கிற மிகப்​பெரிய குப்பைகிடங்கு உள்​ளது. இங்கு பல லட்​சம் டன் குப்​பைகள் மலை மலை​யாக குவிக்​கப்​பட்​டிருந்​தன.

இது குப்​பைக் கிடங்கை சுற்றி வசிக்​கும் மக்​களுக்கு பெரும் அச்​சுறுத்​தலாக இருந்து வந்​தது. எனவே குப்​பைக் கிடங்கை மூடி, குப்பைகளை வேறு இடத்​துக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வந்​தது. அதன்​படி நேற்று முன்​தினம் டார் எஸ் சலாம் குப்​பைக் கிடங்கு மூடப்பட இருந்​தது.

இந்த சூழலில் கொனாக்​ரி​யில் நேற்று முன்​தினம் கொட்​டித்​தீர்த்த கனமழை​யால் கிடங்​கில் இருந்த குப்பை மலை ஒன்று அதிகாலை 3 மணிக்கு சரிந்​து, குடி​யிருப்பு பகுதி மீது விழுந்​தது. அப்​போது வீடு​களில் ஆழ்ந்த உறக்​கத்​தில் இருந்த மக்​கள் உயிரோடு புதைந்​தனர்.

இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்​ததும் உடனடி​யாக மீட்பு பணி​கள் முடுக்​கி​விடப்​பட்​டன. இடி​பாடு​களில் இருந்து இது​வரை 22 உடல்​கள் மீட்​கப்​பட்​டுள்​ளன. இடி​பாடு​களில் இன்​னும் பலர் சிக்​கி​யிருப்பதால் உயி​ரிழப்பு அதிகரிக்கும் என அஞ்​சப்​படு​கிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here