மாற்றம் என்று வந்தவர்களால் மாற்றம் இல்லை – பிரேமலதா விமர்சனம்

0
38

 ‘​மாற்றம் என்று சொல்லி வந்​தவர்​களால் எந்​த​வித​மான மாற்​ற​மும் ஏற்​பட​வில்​லை’ என தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விமர்​சித்​துள்​ளார்.

தேமு​திக நிறு​வனத்​தலை​வர் விஜய​காந்​தின் 74-வது பிறந்​த​நாளை முன்​னிட்​டு, சென்னை கோயம்​பேட்​டில் உள்ள தலைமை அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், ராமாபுரம் எம்​ஜிஆர் காது கேளாதோர் பள்ளி மாணவர்​களுக்கு ரூ.50 ஆயிரத்​துக்​கான காசோலை​யை​யும், டெல்லி தமிழ் சங்​கத்​துக்கு ஏழை மாணவர்​களுக்கு கல்வி உதவிக்​காக ரூ.1 லட்​சத்​துக்​கான காசோலை​யை​யும் தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய்​காந்த் வழங்​கி​னார்.

அதைத்​தொடர்ந்து செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: பரந்​தூர் விமான நிலைய திட்​டம் உட்பட எந்​தத் திட்​டம் வந்​தா​லும் அது மக்​களுக்​கான திட்​ட​மாக இருக்க வேண்​டும்.

உண்​மை​யாகவே மக்​கள் பாதிக்​கப்​படு​கிறார்​கள்; விளைநிலங்​கள் அதிக அளவில் பாதிக்​கப்​படு​கின்றன என்​றால் அந்​தத் திட்​டத்​துக்கு தேமு​திக துணை நிற்​காது.

தேர்​தலில் வாக்​குறுதி அளித்​தால், அதை நிறைவேற்ற வேண்​டும். எந்த தாய்​மா​ராவது 6 சிலிண்​டர்​களை இலவச​மாகக் கொடுங்​கள் என்று கேட்​டார்​களா? தேர்​தலில் வாக்​குறு​தியை கொடுத்​து​விட்டு அதை முறை​யாக நிறைவேற்ற முடிய​வில்லை என்​றால் என்ன பயன்? மகளிருக்கு ரூ.2500 வழங்​கப்​படும் என்று தெரி​வித்​தார்​கள்.

ஆனால் தற்​போது​வரை அது வழங்​கப்​பட​வில்​லை. மாற்​றம் மாற்​றம் என்று சொல்லி வந்​தவர்​களால் எந்​த​வித​மான மாற்​ற​மும் இல்​லை. திமுக​வுடன் தான் கூட்​டணி என்​ப​தில் நாங்​கள் உறு​தி​யாக இருக்​கிறோம். சில கட்​சி​யினர் அமைச்​சர் பதவிக்காக வேறு கூட்​ட​ணிக்கு மாறி விட்​டார்​கள்.

எனக்​கும் அழைப்பு வந்​தது. ஆனால் நான் செல்​ல​வில்​லை. எங்​கள் நிலைப்​பாட்​டில் என்​றும் மாற்​றம் இருக்​காது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here