பேருந்துகள் நிற்காமல் செல்வதாக புகார்: நிறுத்தங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல ஓட்டுநர், நடத்துநர்களுக்கு எம்டிசி உத்தரவு

0
18

ஓட்​டுநர் மற்​றும் நடத்​துநர்​கள் நிர்​ண​யிக்​கப்​பட்ட பேருந்து நிறுத்​தங்​களில் பேருந்தை நிறுத்தி பயணி​களை ஏற்​றிச் செல்ல வேண்​டும் என மாநகர போக்​கு​வரத்து கழகம் உத்​தர​விட்​டுள்​ளது.

இது குறித்து மாநகர போக்​கு​வரத்து கழகம் வெளி​யிட்ட சுற்​றறிக்​கை​: பேருந்து நிறுத்​தங்​களில் பயணி​கள் குறிப்​பாக பெண்​கள் பேருந்தை நிறுத்​து​மாறு சைகை செய்​த​போ​தி​லும், சில பேருந்​துகள் நிற்​காமல் செல்​வ​தாக அரசுக்கு புகார் பெறப்​பட்​டுள்​ளது.

பயணி​களுக்கு சிறப்​பான பாது​காப்​பான மற்​றும் நம்​பக​மான பொதுப்​போக்​கு​வரத்​துச் சேவையை வழங்​கு​வது. மா.​போ.கழகத்​தின் முதன்​மை​யான கடமை​யாகும். எனவே, ஓட்​டுநர், நடத்​துநர்​கள் கீழ்க்காணும் அறி​வுறுத்​தல்​களை தவறாது பின்​பற்ற வேண்​டும்.

சாதாரண கட்டண பேருந்துகள் அனைத்து பேருந்து நிறுத்​தங்​களி​லும் தவறாது பேருந்தை நிறுத்தி பயணி​களை ஏற்றி இறக்கிச் செல்ல வேண்​டும். விரைவு, சொகுசு, குளிர்​சாதன பேருந்​துகள் நிர்​ண​யிக்​கப்​பட்ட நிறுத்​தங்​களில் தவறாது பேருந்தை நிறுத்தி பயணி​களை ஏற்​றி, இறக்கிச் செல்ல வேண்​டும்.

பேருந்தை பிடிப்​ப​தற்​காக வரும் பயணி​களிடம் கடுமை​யாகப் பேசுதல் அவம​திக்​கும் வகை​யில் நடந்து கொள்​ளுதல் அல்​லது பயணி​களை ஏற்ற மறுத்​தல் போன்ற செயல்​களில் ஓட்டுநர், நடத்​துநர்​கள் ஈடு​படக்​கூ​டாது.

பேருந்து நிறுத்​தங்​களை தவிர்த்​துச் செல்​லுதல், பயணி​களை ஏற்ற மறுத்​தல் மற்​றும் பயணி​களிடம் முறையற்ற வகை​யில் நடந்​துக்​கொண்​டால் ஒழுங்கு நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும்.

கிளை மேலா​ளர்​கள், மண்டல மேலா​ளர்​கள் மற்​றும் சம்​பந்​தப்​பட்ட கண்​காணிப்பு அலு​வலர்​கள் பிற்​பகல் மற்​றும் மாலை நேரங்​களில் முக்​கிய பேருந்து நிறுத்​தங்​களில் திடீர் ஆய்​வு​கள் மேற்​கொண்டு பேருந்​துகள் முறை​யாக பேருந்து நிறுத்​தங்​களில் நின்று செல்​கின்​றனவா என கண்​காணித்து உறுதி செய்ய வேண்​டும்.

புதி​தாக பணிக்கு வரும் ஓட்​டுநர், நடத்​துநர்​கள் மற்​றும் புத்​தாக்க பயிற்​சிக்கு வரும் ஓட்​டுநர், நடத்​துநர்​களுக்கு மேற்​குறிப்​பிட்ட வழி​முறை​களை பின்​பற்ற பயிற்சி அளிக்க வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here