பாக்., சவுதி, துருக்கி இடையே முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்

0
26

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி நாடு​கள் இடையே நேற்று முத்​தரப்பு பாது​காப்பு ஒப்​பந்​தம் கையெழுத்தானது. இதன்​படி ஒரு நாட்​டின் மீது தாக்​குதல் நடத்தப்பட்​டால் 3 நாடு​கள் மீதான தாக்​குதலாக கருதப்​படும் என்று அறிவிக்​கப்​பட்டு உள்​ளது.

கடந்த 2025-ம் ஆண்டு செப்​டம்​பரில் பாகிஸ்​தான், சவுதி அரேபியா இடையே பாது​காப்பு ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதன்​படி எதிரி நாடு​களால் சவுதி அரேபி​யா​வுக்கு அச்​சுறுத்​தல் ஏற்​பட்​டால் பாகிஸ்​தானின் அணு ஆயுதங்​களை பயன்​படுத்த ஒப்பந்​தத்​தில் வழி​வகை செய்​யப்​பட்டு இருக்​கிறது. இந்த சூழலில் பாகிஸ்​தான், சவுதி அரேபி​யா​வுடன் புதி​தாக துருக்​கி​யும் கைகோத்து உள்​ளது.

சவுதி அரேபி​யா​வின் மெக்​கா​வில் நேற்று சிறப்பு மாநாடு நடைபெற்​றது. இதில் சவுதி இளவரசர் சல்​மான், பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அந்த நாட்டு ராணுவ தளபதி அசிம் முனீர், துருக்கி அதிபர் எர்​டோகன் ஆகியோர் பங்​கேற்​றனர். அப்போது பாகிஸ்​தான், சவுதி அரேபி​யா, துருக்கி நாடு​கள் இடையே முத்​தரப்பு பாது​காப்பு ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: பல்​வேறு விவ​காரங்​களில் 3 நாடு​கள் இடையே ஒரு​மித்த கருத்து நில​வு​கிறது. முஸ்​லிம் மதம் 3 நாடுகளை​யும் ஒன்​றிணைக்​கிறது. இதன் அடிப்​படை​யில் சவுதி அரேபி​யா, துருக்​கி, பாகிஸ்​தான் நாடு​கள் இடையே முத்​தரப்பு பாது​காப்பு ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது. புதிய ஒப்​பந்​தத்​தின்​படி ஒரு நாட்​டின் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டால் 3 நாடு​கள் மீதான தாக்​குதலாக கருதப்​படும். மூன்று நாடு​களும் ஓரணி​யாக செயல்​படும். இவ்​வாறு முத்​தரப்பு பாது​காப்பு ஒப்​பந்​தத்​தில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது.

முஸ்​லிம் நேட்டோ கூட்​டமைப்பு

இதுகுறித்து சர்​வ​தேச பாது​காப்பு நிபுணர்​கள் கூறிய​தாவது: அமெரிக்கா தலை​மையி​லான நேட்டோ கூட்​டமைப்​பில் 32 நாடுகள் இடம்​பெற்று உள்​ளன. இதில் பெரும்​பாலானவை கிறிஸ்தவ நாடு​கள் ஆகும். சர்​வ​தேச அரங்​கில் வலு​வான ராணுவ கூட்​டமைப்​பாக நேட்டோ விளங்​கு​கிறது. இதே பாணி​யில் பாகிஸ்தான், சவுதி அரேபி​யா, துருக்கி நாடு​கள் ஒன்​றிணைந்து புதிய கூட்​டமைப்பை உரு​வாக்கி உள்​ளன. இது முஸ்​லிம் நேட்டோ என்று அழைக்​கப்​படு​கிறது.

பாது​காப்பு ஒத்​துழைப்பு தொடர்​பாக சுமார் ஓராண்​டுக்​கும் மேலாக 3 நாடு​கள் இடையே நீண்ட பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வந்​தது. இதன் இறு​திக் கட்​ட​மாக தற்​போது முத்​தரப்​பு பாது​காப்​பு ஒப்​பந்​தம்​ கையெழுத்​தாகி உள்​ளது. இவ்​வாறு சர்​வ​தேச பாதுகாப்பு நிபுணர்​கள்​ தெரிவித்​துள்​ளனர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here