சென்னை மாவட்ட பள்ளிகளுக்​கான வாலிபால் போட்டி

0
20

சென்னை மாவட்ட பள்​ளி​களுக்கு இடையி​லான சிறுவர், சிறுமியர் வாலி​பால் சாம்​பியன்​ஷிப் போட்டி எழும்​பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளை​யாட்​டரங்​கில் நேற்று தொடங்​கியது.

இதில் சிறு​வர்​கள் பிரி​வில் 19 அணி​களும், சிறுமியர் பிரி​வில் 12 அணி​களும் கலந்​து​கொண்​டுள்​ளன. இந்த போட்​டியை சென்னை மாவட்ட வாலி​பால் சங்​கம், எஸ்​ஏஎன் அகாடமி பள்​ளி​கள் குழு​மம் ஆகியவை இணைந்து நடத்​துகின்​றன.

தொடக்க விழா​வில் எஸ்​டிஏடி உறுப்​பினர் செயலர் மேக​நாத ரெட்​டி, வரு​மான வரித் துணை ஆணை​யர் விஷ்ணுசங்​கர் மற்​றும் சென்னை மாவட்ட வாலி​பால் சங்க நிர்​வாகி​கள் தினகர், ஜெகதீசன், பழனியப்​பன், கேசவன், பாக்​ய​ராஜ் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

தொடக்க நாளில் நடை​பெற்ற லீக் ஆட்​டங்​களின் முடி​வில் சிறு​வர்​கள் பிரி​வில் பெரம்​பூர் டான் போஸ்​கோ, ஆலந்​தூர் மான்ஃ​போர்ட், ராயபுரம் செயின்ட் பீட்​டர்​ஸ், கொட்​டி​வாக்​கம் ஒய்​எம்​சிஏ, மயி​லாப்​பூர் செயின்ட் பீட்​ஸ், பெருங்​குடி பாரத் தாஸ், முகப்​பேர் வேலம்​மாள், அம்​பத்​தூர் சேது பாஸ்​கரா ஆகிய அணி​கள் கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறின.

சிறுமியர் பிரி​வில் மெக்​டலின், முகப்​பேர் வேலம்​மாள், கோலா சரஸ்​வ​தி, செனாய் நகர் பிஎம்​ஸ், பெரம்​பூர் அரசு பள்​ளி, அண்ணா நகர் எஸ்​பிஓஏ, நுங்​கம்​பாக்​கம் வித்​யோதயா பள்​ளி, மயி​லாப்​பூர் லேடி சிவ​சாமி பள்ளி ஆகிய அணி​கள் கால் இறுதி சுற்​றில் கால்​ப​தித்​தன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here