டிஎன்பிஎல் 10-வது சீசன் இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் – திருப்பூர் அணிகள் மோதல்

0
22

டிஎன்​சிஏ சார்​பில் நடத்​தப்​படும் டிஎன்​பிஎல் தொடரின் 10-வது சீசன் இன்று (4-ம் தேதி) தொடங்கி வரும் வரும் 28-ம் தேதி வரை நடை​பெறுகிறது.

சேப்​பாக் சூப்​பர் கில்​லிஸ், திண்​டுக்​கல் டிராகன்​ஸ், திருப்​பூர் தமிழன்​ஸ், சர்க்​கிள்​பேஸ் மதுரை பேந்​தர்​ஸ், கோவை ராயல் கிங்​ஸ், சேலம் ஸ்பார்​டன்​ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணி​கள் கலந்து கொள்​ளும் இந்​தத் தொடர் இம்​முறை 2 கட்​டங்​களாக நடத்​தப்​படு​கிறது.

முதல் கட்ட போட்டி இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை திண்​டுக்​கல்​லிலும், 2-வது கட்ட போட்டி சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் வரும் 18-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை​யும் நடை​பெறுகிறது. லீக் சுற்று போட்​டிகள் இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை நடை​பெறுகின்​றன.

பிளே ஆஃப் சுற்​றின் முதல் தகுதி சுற்று ஆட்​டம் 23-ம் தேதி​யும், எலிமினேட்​டர் ஆட்​டம் 24-ம் தேதி​யும், 2-வது தகுதி சுற்று ஆட்​டம் 26-ம் தேதி​யும் நடை​பெறுகின்​றன.

சாம்​பியன் பட்​டம் வெல்​வது யார் என்​பதை தீர்​மானிக்​கும் இறு​திப் போட்டி 28-ம் தேதி சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெறுகிறது. இம்​முறை 22 டபுள் ஹெட்​டர்ஸ் (ஒரே நாளில் 2 ஆட்​டங்​கள்) நடை​பெறுகின்​றன. மொத்​தம் 32 ஆட்​டங்​கள் நடை​பெற உள்​ளன.

தொடக்க நாளான இன்று இரவு 7.30 மணிக்கு திண்​டுக்​கலில் நடை​பெறும் முதல் லீக் ஆட்​டத்​தில் திண்​டுக்​கல் டிராகன்ஸ் – திருப்​பூர் தமிழன்ஸ் அணி​கள் மோதுகின்​றன. இந்த தொடரை சோனி ஸ்போர்ட்​ஸ் டென் 4 சேனல் நேரலை செய்​கிறது. மேலும் டிஎன்​பிஎல் யூடியூப் சேனலிலும்​ போட்​டிகளை கண்​டுகளிக்​கலாம்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here