டிஎன்சிஏ சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎல் தொடரின் 10-வது சீசன் இன்று (4-ம் தேதி) தொடங்கி வரும் வரும் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது.
சேப்பாக் சூப்பர் கில்லிஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சர்க்கிள்பேஸ் மதுரை பேந்தர்ஸ், கோவை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடர் இம்முறை 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது.
முதல் கட்ட போட்டி இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை திண்டுக்கல்லிலும், 2-வது கட்ட போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 18-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையும் நடைபெறுகிறது. லீக் சுற்று போட்டிகள் இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை நடைபெறுகின்றன.
பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதி சுற்று ஆட்டம் 23-ம் தேதியும், எலிமினேட்டர் ஆட்டம் 24-ம் தேதியும், 2-வது தகுதி சுற்று ஆட்டம் 26-ம் தேதியும் நடைபெறுகின்றன.
சாம்பியன் பட்டம் வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி 28-ம் தேதி சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இம்முறை 22 டபுள் ஹெட்டர்ஸ் (ஒரே நாளில் 2 ஆட்டங்கள்) நடைபெறுகின்றன. மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
தொடக்க நாளான இன்று இரவு 7.30 மணிக்கு திண்டுக்கலில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் – திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த தொடரை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 4 சேனல் நேரலை செய்கிறது. மேலும் டிஎன்பிஎல் யூடியூப் சேனலிலும் போட்டிகளை கண்டுகளிக்கலாம்.
