கார்த்தியை இயக்கும் மோகன் ராஜா

0
20

கார்த்தி நடிக்கவுள்ள புதிய படத்தை மோகன் ராஜா இயக்கவுள்ளார்.

தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மார்ஷல்’ மற்றும் கல்யாண் ஷங்கர் இயக்கி வரும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி. இதில் கல்யாண் ஷங்கர் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் கார்த்தி.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தை மோகன் ராஜா இயக்கவுள்ளார். 2017-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘வேலைக்காரன்’ படத்தை இயக்கியிருந்தார். அதற்குப் பிறகு தமிழில் மோகன் ராஜா இயக்கும் படமாக கார்த்தி நடிக்கும் படம் அமைந்துள்ளது.

கடைசியாக தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த ‘காட்ஃபாதர்’ படத்தை இயக்கியிருந்தார். இப்படம் மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற ‘லூசிஃபர்’ படத்தின் ரீமேக் ஆகும். மோகன் ராஜா இயக்கவுள்ள படம் எப்போது தொடங்கும், யாரெல்லாம் கார்த்தியுடன் நடிக்கவுள்ளார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here