வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

0
17

மக்களவையைத் தொடர்ந்து நேற்று மாநிலங்களவை​யிலும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.

நீட் தேர்வு வினாத்​தாள் கசிவை கண்​டித்து நாடு முழு​வதும் மாணவ, மாண​வியர் போராட்​டம் நடத்​தினர். இதைத் தொடர்ந்து வினாத்​தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேற்​றப்​படும் என்று பிரதமர் நரேந்​திர மோடி உறுதி அளித்​தார்.

இதன்​படி கடந்த 27-ம் தேதி மக்​களவை​யில் பொதுத்​தேர்​வு​கள் (முறை​கேடு​கள் தடுப்​பு) திருத்த மசோதா 2026 தாக்​கல் செய்​யப்​பட்​டது. கடந்த 28-ம் தேதி மசோதா மீது விவாதம் நடை​பெற்​றது. இதைத் தொடர்ந்து இந்த மசோதா நேற்று முன்​தினம் மக்​களவை​யில் குரல் வாக்​கெடுப்பு மூலம் நிறைவேற்​றப்​பட்​டது.

இந்த சூழலில் மக்​களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. நாடாளு​மன்ற பேரணி​யில் மாணவர்​கள் மீது தடியடி நடத்​தப்​பட்​டதை கண்​டித்து எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் அமளி​யில் ஈடு​பட்​டனர். இதனால் பிற்​பகல் 2 மணி வரை மக்​களவை ஒத்​திவைக்​கப்​பட்​டது. பிற்​பகலில் அவை கூடிய​போது கூச்​சல், குழப்​பம் நீடித்​த​தால் பிற்​பகல் 3 மணி வரை ஒத்​திவைக்​கப்​பட்​டது. மீண்​டும் அவை கூடிய​போது வழக்​கம்​போல அமளி ஏற்​பட்​டது. இதனால் 3.30 மணி வரை அவை ஒத்​திவைக்​கப்​பட்​டது.

வந்தே மாதரம் மசோதா நிறைவேற்றம்

மீண்​டும் அவை கூடிய​போது தேசிய கவுரவ அவம​திப்பு தடுப்பு (திருத்த) மசோதா 2026 தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மசோதா மாநிலங்​களவை​யில் நேற்​று​முன்​தினம் நிறைவேற்​றப்​பட்​டது. இதைத் தொடர்ந்து எதிர்க்​கட்​சிகளின் கடும் அமளிக்கு நடுவே மக்​களவை​யில் நேற்று குரல் வாக்​கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்​றப்​பட்​டது.

புதிய மசோ​தா​வின்​படி வந்தே மாதரம் பாடலை அவம​திப்​போருக்கு 3 ஆண்​டு​கள் வரை சிறைத் தண்​டனை மற்​றும் அபராதம் விதிக்​கப்​படும். மசோதா நிறைவேறிய பிறகு மக்​களவை நாள் முழு​வதும் ஒத்​திவைக்​கப்​பட்​டது. மாநிலங்​களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. அப்​போது மத்​திய சுகா​தார அமைச்​சர் ஜே.பி. நட்டா பேசும்​போது, “அனைத்து பிரச்​சினை​கள் குறித்​தும் விவா​திக்க மத்​திய அரசு தயா​ராக உள்​ளது. ஆனால் எதிர்க்​கட்​சிகள் திட்​ட​மிட்டு நாடாளு​மன்​றத்தை முடக்கி வரு​கின்​றன” என்று குற்​றம் சாட்​டி​னார்.

காங்​கிரஸ் எம்பி பிரமோத் திவாரி பேசும்​போது, “நா​டாளு​மன்ற பேரணி​யில் மாணவர்​கள் மீது நடத்​தப்​பட்ட தடியடி குறித்து மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா அவைக்கு வந்து விளக்​கம் அளிக்க வேண்​டும்” என்று வலி​யுறுத்​தி​னார். அமைச்​சர் அமித் ஷா அவைக்கு வராததை கண்​டித்து எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் வெளிநடப்பு செய்​தனர்.

இதன்​பிறகு பிற்​பகல் 2 மணிக்கு மாநிலங்​களவை​யில் மத்​திய அமைச்​சர் ஜிதேந்​திர சிங், பொதுத்​தேர்​வு​கள் (முறை​கேடு​கள் தடுப்​பு) திருத்த மசோதா 2026-ஐ தாக்​கல் செய்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: யுபிஎஸ்​சி, ஆஆர்​பி, ஐபிபிஎஸ், தேசிய தேர்வு முகமை ஆகியவை போட்​டித் தேர்​வு​கள், நுழைவுத் தேர்​வு​களை நடத்தி வரு​கின்​றன. கடந்த காங்​கிரஸ் ஆட்​சிக் காலத்​தில் ஏராள​மான போட்​டி, நுழைவுத் தேர்​வு​களின் வினாத்​தாள்​கள் கசிந்​தன.

தற்​போதைய தேசிய ஜனநாயக கூட்​டணி அரசு வினாத்​தாள் கசிவை தடுக்க கடுமை​யான நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறது. இதன் ஒரு பகு​தி​யாக நாடாளு​மன்​றத்​தில் பொதுத்​தேர்​வு​கள் (முறை​கேடு​கள் தடுப்​பு) திருத்த மசோதா 2026 தாக்​கல் செய்​யப்​பட்டு இருக்​கிறது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே பேசி​ய​தாவது: வினாத்​தாளை கசி​வில் தொடர்​புடைய​வர்​கள் சுதந்​திர​மாக திரி​கின்​றனர். வினாத்​தாள் கசி​வால் பாதிக்​கப்​பட்ட லட்​சக்​கணக்​கான மாணவர்​கள் இன்​னல்​களை அனுப​வித்து வரு​கின்​றனர். வினாத்​தாள் கசிவுக்கு எதி​ராக போராடிய இளைஞர்​கள் பல்​வேறு கொடுமை​களை எதிர்​கொண்டு வரு​கின்​றனர்.

தற்​போது தாக்​கல் செய்​யப்​பட்​டிருக்​கும் மசோ​தா​வில் தண்​டனை காலம், அபராதம் அதி​கரிக்​கப்​பட்டு உள்​ளது. இந்த மசோ​தா​வால் எந்த பயனும் இல்​லை. கடந்த 2024-ல் நீட் வினாத்​தாள் கசிந்​தது. மீண்​டும், மீண்​டும் நீட் வினாத்​தாள் கசிவது ஏன்? கடந்த 2024-ம் ஆண்டு நீட் வினாத்​தாள் கசிவு வழக்​கில் கைது செய்​யப்​பட்ட முக்​கிய குற்​ற​வாளியை நிரப​ராதி என்று சிபிஐ தற்​போது கூறுகிறது. வினாத்​தாள் கசிவு தொடர்​பான வழக்​கில் சிபிஐ வழக்​கறிஞர்​கள் ஆஜராவதைகூட தவிர்க்​கின்​றனர்.

பிரதமர் நரேந்​திர மோடி​யின் ஆட்​சிக் காலத்​தில் நாடு முழு​வதும் சுமார் 1.25 லட்​சம் மாணவ, மாண​வியர் தற்​கொலை செய்​துள்​ளனர். இதுகுறித்து மத்​திய அரசு விளக்​கம் அளிக்க வேண்​டும். இவ்​வாறு மல்​லி​கார்​ஜுன கார்கே பேசி​னார். பாஜக எம்பி சுதான்ஷு திரிவேதி பேசும்​போது, “காங்​கிரஸ் தலை​வர் கார்கே பொய்​களை பரப்​பு​கிறார்” என்று குற்​றம் சாட்​டி​னார்.

இரவு 9 மணி வரை விவாதம் நீடித்​தது. இறு​தி​யில் எதிர்க்​கட்சி உறுப்​பினர்​கள் வெளிநடப்பு செய்​தனர். இதன்​பிறகு குரல் வாக்​கெடுப்பு மூலம் பொதுத்​தேர்​வு​கள் (முறை​கேடு​கள் தடுப்​பு) திருத்த மசோதா 2026 நிறைவேற்​றப்​பட்​டது.

பிரதமர் மோடி முக்​கிய ஆலோ​சனை

நாடாளு​மன்ற வளாகத்​தில் உள்ள பிரதமர் நரேந்​திர மோடி​யின் அலு​வல​கத்​தில் நேற்று உயர்​நிலை ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. பிரதமர் மோடி தலை​மை​யில் நடந்த இந்த கூட்​டத்​தில் மத்​திய அமைச்​சர்​கள் அமித் ஷா, ராஜ்​நாத் சிங், ஜெய்​சங்​கர், நிர்​மலா சீதா​ராமன், ஜே.பி.நட்​டா, பியூஷ் கோயல், ஹர்​தீப் சிங் புரி, சர்​வானந்த சோனோ​வால், தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

நாடாளுமன்ற மழைக்​கால கூட்​டத் தொடரை எதிர்​க்​கட்​சிகள் தொடர்​ந்து முடக்கி வருவது குறித்து கூட்​டத்​தில் விரி​வாக ஆலோசனை நடத்​தப்​பட்​டது. மழைக்​கால கூட்​டத் தொடரில் நிறைவேற்ற வேண்​டிய முக்​கிய மசோ​தாக்​கள் குறித்​தும் ஆலோசிக்​கப்​பட்​டது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here