வழக்குகளை திரும்ப பெறாவிட்டால் மீண்டும் போராட்டம்: மத்திய அரசுக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கை

0
19

நீட் தேர்வுக்கு எ​தி​ராகப் போராட்​டம் நடத்​திய மாணவர்​கள் மீதான வழக்குகளை திரும்​பப் பெறாவிட்டால் மீண்டும் தொடர் போராட்​டத்​தில் ஈடுபடுவோம் என்​றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) மத்​திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்​துள்​ளது.

இது தொடர்​பாக சிஜேபி செய்​தித் தொடர்​பாளர் அசுதோஷ் ரங்கா நேற்று வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யுள்​ள​தாவது: வினாத்தாள் கசிவுக்கு எதி​ராகப் போராடிய மாணவர்​கள் மீது வழக்​கு​கள் எது​வும் பதிவு செய்​யப்​ப​டாது என்​றும், நிலு​வை​யில் உள்ள வழக்​கு​கள் திரும்​பப் பெறப்​படும் என்​றும் மத்​திய அரசு உறு​தியளித்திருந்​தது.

ஆனால், பிஹார் உள்​ளிட்ட மாநிலங்​களில் நூற்​றுக்​கணக்​கான மாணவர்​கள் இன்​ன​மும் சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளனர். ஜனநாயக வழி​யில் போராடிய மாணவர்​கள் மீது கொலை முயற்சி போன்ற கடுமை​யான பிரிவு​களின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்து கைது செய்​வதை ஏற்​றுக் கொள்​ளவே முடி​யாது.

மத்​திய அரசுடன் எட்​டப்​பட்ட ஒப்​பந்​தத்​தின்​படி, டெல்லி காவல் துறை, மத்​திய புல​னாய்வு அமைப்​பு​கள், பாஜக ஆட்சி செய்​யும் மாநில காவல் துறை​யினர் மாணவர்​கள் மீது பதிவு செய்​துள்ள அனைத்து வழக்​கு​களை​யும் உடனடி​யாகத் திரும்​பப் பெற வேண்டும். கைது செய்​யப்​பட்​ட​வர்​களை விடு​தலை செய்ய வேண்​டும். இதைச் செய்​யத் தவறி​னால், நாங்​கள் மீண்​டும் உடனடி​யாக வீதியில் இறங்​கிப் போராட்​டத்​தில் ஈடுபட வேண்​டிய கட்டாயத்துக்கு தள்​ளப்​படு​வோம்.

மத்​திய அமைச்​சர்​கள் ஜே.பி.நட்டா மற்​றும் ஜிதேந்​திர சிங் ஆகியோர் தலை​யிட்​டு, மாணவர்​கள் மீது எவ்​வித வழக்​கு​களும் தொடரப்​ப​டா​மல் இருப்​பதை உறுதி செய்ய வேண்​டும். இவ்​வாறு ரங்கா தெரி​வித்​துள்​ளார். இதனிடையே, மத்​தி​யக் கல்வி அமைச்சர் தர்​மேந்​திர பிர​தானின் ராஜி​னா​மா​வைத் தொடர்ந்து சிஜேபி நிர்​வாகி​கள் நடன​மாடிக் கொண்​டாடிய வீடியோக்​கள் சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி விமர்​சனங்​களை எழுப்பியுள்ளன.

நாட்​டின் பல்​வேறு பகு​தி​களில் மாணவர்​கள் கைது செய்​யப்​பட்டு வரும் நிலை​யில், இத்​தகைய கொண்​டாட்​டங்​கள் தேவையா என்று கேள்வி​கள் எழுப்​பப்​பட்​டன. இதற்​குப் பதிலளித்த சிஜேபி செய்​தித் தொடர்​பாளர் சவுரவ் தாஸ், “தற்​போதைய ஜென் ஸீ தலை​முறை​யினரின் போராட்ட வடிவத்தை மூத்த அரசி​யல்​வாதிகள் புரிந்து கொள்​ள​வில்​லை.

நாங்​கள் நடன​மாடிக் கொண்டே எதிர்ப்பு தெரிவிக்​க​வும் செய்​வோம், கோல்டு காபியை சுவைத்​துக் கொண்டே கூட்​டத்தை திரட்ட​வும் செய்​வோம். முந்​தைய தலை​முறை​யினர் நினைக்​கும் அதே பாணி​யில் தான் போ​ராட்​டங்​கள் இருக்க வேண்​டும்​ என்​ற அவசி​யமில்​லை” என்​று விளக்​கம்​ அளித்​துள்​ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here