தேர்வு சீர்திருத்த குழுவில் ராக்கெட் விஞ்ஞானி, உளவு நிபுணரை நியமித்தது ஏன்?

0
16

போட்​டித் தேர்​வு, நுழைவுத் தேர்வு சீர்திருத்தங்களுக்காக இன்ஃ​போசிஸ் இணை நிறு​வனர் நந்​தன் நிலேகனி தலை​மை​யில் உயர் நிலைக் குழு அமைக்​கப்​பட்டு உள்ளது.

இந்த குழு​வில் இஸ்ரோ முன்​னாள் தலை​வர் சோம் நாத், இந்​திய உளவுத் துறை முன்​னாள் இயக்​குநர் தபன் டேகா, சென்னை ஐஐடி இயக்​குநர் காமகோடி, கல்​வித்​துறை முன்​னாள் செயலர் அனிதா கர்​வால், போக்​கு​வரத்து துறை நிபுணர் அம்​ரித் லால் மீனா ஆகியோர் நியமிக்​கப்​பட்டு உள்​ளனர்.

பெரும்​பாலான போட்​டித் தேர்​வு​கள், நுழைவுத் தேர்​வு​கள் கணினி வழி​யில் நடத்​தப்​படு​கின்​றன. மருத்​துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்​வும் அடுத்த ஆண்டு முதல் கணினி வழி​யில் நடத்​தப்​படும் என்று அறிவிக்​கப்​பட்டு உள்​ளது.

இதை கருத்​தில் கொண்டு உலக அளவில் புகழ்​பெற்ற தொழில்​நுட்ப வல்​லுநர் நந்​தன் நிலேகனி தலை​மை​யில் உயர்​நிலைக் குழு அமைக்​கப்​பட்டு உள்​ளது. இவர் ஆதார் ஆணை​யத்​தின் முதல் தலை​வ​ராகப் பணி​யாற்​றிய​வர். அவர் உரு​வாக்​கிய கட்டமைப்புகளின் அடிப்​படை​யில் இது​வரை 144 கோடி ஆதார் அட்​டைகள் விநி​யோகிக்​கப்​பட்டு உள்​ளன. தற்​போது போட்​டித் தேர்​வு, நுழைவுத் தேர்​வு​களுக்​காக நம்​பக​மான, பாது​காப்​பான தொழில் ​நுட்ப கட்​டமைப்​பு​களை நந்​தன் நிலேகனி உரு​வாக்க உள்​ளார்.

ராக்​கெட் விஞ்​ஞானி சோம்​நாத்: இஸ்ரோ முன்​னாள் தலை​வர் சோம்​நாத், ராக்​கெட் விஞ்​ஞானி என்று அழைக்​கப்​படு​கிறார். அவர் இஸ்​ரோ​வில் பணி​யாற்​றிய​போது துல்​லிய​மான திட்டமிடலுக்​காக அனை​வ​ராலும் பாராட்​டப்​பட்​டார். இக்​கட்​டான சூழல்​களை திறம்பட கையாள்​வது, தவறுகளை துல்​லிய​மாகக் கண்​டறிவது, அனைத்து தரப்பு நிபுணர்​களை​யும் ஒன்றிணைப்பது உள்​ளிட்ட தலை​மைப் பண்​பு​களுக்​காக சோம்நாத் குழு​வில் இணைக்​கப்​பட்டு உள்​ளார்.

சென்னை ஐஐடி இயக்​குநர் காமகோடி அடிப்​படை​யில் கணினி விஞ்​ஞானி ஆவார். கணினி வடிவ​மைப்​பு, செயற்கை நுண்ணறிவு, சைபர் பாது​காப்பு உள்​ளிட்ட பல்​வேறு துறை​களில் அவர் திறம்பட செயல்​பட்டு வரு​கிறார். பொதுத்​தேர்​வு, நுழைவுத்தேர்வு வினாத்​தாள்​களை திருத்​தும் பணியை நேர்த்தியாக மேற்​கொள்ள அவர் மிக முக்​கிய பங்​களிப்பை வழங்க உள்​ளார்.

உளவுத் துறை முன்​னாள் இயக்குநர்: நந்​தன் நிலேகனி குழு​வில் இந்​திய உளவுத் துறை​யின் முன்​னாள் இயக்​குநர் தபன் டேகா இடம்​ பெற்று உள்​ளார். வினாத்​தாள் கசிவை தடுப்​பது, தேர்​வில் ஆள்​மாறாட்​டங்​களை தடுப்​பது, தேர்வு தொடர்​பான உளவுத் தகவல்​களை திரட்​டு​வது ஆகிய​வற்​றுக்​காக தபன் டேகா உயர்​நிலைக் குழு​வில் நியமிக்​கப்​பட்டு உள்​ளார்.

முன்​னாள் கல்​வித் துறை செய​லா​ளர் அனிதா கர்​வால் பள்​ளிக் கல்​வி, பொதுத்​தேர்​வு, கல்​வித் துறை நிர்​வாகத்​தில் மிகுந்த அனுபவம் கொண்​ட​வர். அவர் கல்​வித் துறை செய​லா​ள​ராக இருந்த​போது பல்​வேறு சீர்​திருத்​தங்​கள் அமல் செய்​யப்​பட்​டன. இவற்றை கருத்​தில் கொண்டு அவர் குழு​வில் சேர்க்​கப்​பட்டு உள்ளார்.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதி​காரி​யான அம்​ரித் பால் மீனா, சரக்கு போக்​கு​வரத்து துறை​யின் நிபுண​ராக கருதப்​படு​கிறார். போட்டித்தேர்​வு, நுழைவுத் தேர்வு வினாத்​தாள்​களை வாகனங்களில் கொண்டு செல்​லப்​படும்​போது வினாத்​தாள் கசிகிறது. இதை தடுக்க அம்​ரித் பால் மீனா முக்​கிய வியூகங்களை வகுப்​பார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here