கோயில்களில் கட்டண தரிசனத்தை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

0
34

கோ​யில்​களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வலி​யுறுத்​தி, இந்து முன்​னணி சார்​பில் தமிழகம் முழு​வதும் ஆர்ப்​பாட்​டங்​கள் நடை​பெற்​றன.

தமிழகத்​தில் இந்து சமய அறநிலை​யத்​துறை​யின் கட்​டுப்​பாட்​டில் உள்ள கோயில்​களில் நடை​முறை​யில் உள்ள கட்டண தரிசன முறையை முழு​மை​யாக ரத்து செய்ய வலி​யுறுத்​தி, இந்து முன்​னணி சார்​பில் தமிழகம் முழு​வதும் நேற்று கண்டன ஆர்ப்​பாட்​டங்​கள் நடை​பெற்​றன.

தமிழகம் முழு​வதும் சுமார் 65 முக்​கிய இடங்​களில் இந்த ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. சென்​னை​யில், சிவானந்தா சாலை​யில் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் இந்து முன்​னணி மாநிலச் செய​லா​ளர் மணலி மனோகர், தென்​பாரத அமைப்​பாளர் பக்​தன் ஜி, மாநில செய்​தித் தொடர்​பாளர் ஏ.டி. இளங்​கோவன் உள்​ளிட்ட ஏராள​மான நிர்​வாகி​கள் மற்​றும் தொண்​டர்​கள் கலந்​து​கொண்டு தமிழக அரசுக்கு எதி​ராகக் கோஷங்​களை எழுப்​பினர்.

ஆர்ப்​பாட்​டத்​தின் போது செய்​தி​யாளர்​களிடம் மணலி மனோகர் கூறிய​தாவது: கோயில்​களில் வசூலிக்​கப்​படும் தரிசனக் கட்​ட​ணங்​களை அரசு உடனடி​யாக ரத்து செய்ய வேண்​டும் என்​பது இந்து முன்​னணி​யின் தொடர்ச்​சி​யான கோரிக்​கை​யாகும். இறைவனுக்கு முன்​னால் ஏழை, பணக்​காரன் என்ற வித்​தி​யாசம் இருக்​கக்​கூ​டாது.

அனை​வரும் சமமாகவே நடத்​தப்பட வேண்​டும். தமிழக அரசு ஆடு, மாடு​களை இலவச​மாக வழங்​கு​கிறது; மகளிருக்​குப் பேருந்து பயணம் இலவசம், 200 யூனிட் மின்​சா​ரம் இலவசம் எனப் பல்​வேறு சலுகைகளை அளிக்​கிறது.

ஆனால், கோயி​லில் கடவுளைத் தரிசிக்க மட்​டும் பணம் செலுத்த வேண்​டும் என்று சொல்​வது எந்த விதத்​தில் நியா​யம்? ஆன்​மீக உணர்​வு​களுக்கு மதிப்​பளித்​து, அனைத்​துக் கோயில்​களி​லும் கட்​ட​ணமில்லா தரிசனத்தை அரசு உறுதி செய்ய வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here