நடிகரான ‘வன்மம்’ இயக்குநர்

0
35

விஜய் சேதுபதி நடித்த ‘வன்மம்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் ஜெயகிருஷ்ணா என்ற ஜேகே.

தற்போது நடிகராக கவனம் பெற்று இவர், ‘அசுரன்’, ‘சாணிக்காயிதம்’, ‘கேப்டன் மில்லர்’, ‘லால்சலாம்’, ‘வா வாத்தியார்’, ‘கர’, ‘கருப்பு’ , ‘பிளாஸ்ட்’ என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘லிங்கம்’ வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

அவர் கூறும்போது, “சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு 80-களில் சென்னைக்கு வந்தேன். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸில் பணியாற்றினேன். பிறகு கலைமணி, ஆர்.கே. செல்வ மணி உள்பட பலரிடம் பணியாற்றினேன். 2014ல் விஜய் சேது பதி நடித்த ‘வன்மம்’ படம் மூலம் இயக்குநர் ஆனேன். அதற்கு பிறகு நண்பர்கள் சிலர் நடிக்க அழைத்தார்கள்.

நடிப்பதற்காக இயக்குநர் வெற்றிமாறனிடம் என் நண்பர் எடிட்டர் விடி விஜயன் அறிமுகப்படுத்தி வைத்தார். ஆடிஷன் வைத்தார்கள். அப்படி ‘அசுரன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம் வரவேற்பைப் பெற்றதும் தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. இதுவரை 25 படங்களில் நடித்து முடித்து விட்டேன். அண்மையில் வெளியான ‘லிங்கம்’ வெப் தொடரில் எனது பாத்திரம் பரவலாகப் பேசப் படுகிறது. நடிப்பில் பல பரிமாணங்களைத் தொட வேண்டும் என்பது என் ஆசை” என்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here