உ.பி. – நொய்டா தீ விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

0
21

உத்தர பிரதேச மாநிலம் நொய்டா செக்​டார் 66-ல் உள்ள 4 மாடி குடி​யிருப்பு ஒன்​றின் தரைத்தளத்தில் மின்​சார வாகன பேட்​டரி சார்ஜ் செய்​யப்பட்டிருந்த​போது மின்​கசிவு ஏற்பட்டுள்ளது.

அப்போது அரு​கில் நிறுத்​தப்​பட்​டிருந்த பெட்​ரோல் வாகனங்களுக்கு வேக​மாக பரவி தீப்​பிடித்​துள்​ளது. இதனால் கட்டிடம் முழு​வதும் அடர்ந்த புகை மூட்​டம் சூழ்ந்து தீ மளமளவென பரவியது. தீ விபத்து குறித்த தகவல் கிடைத்​ததும், 7 தீயணைப்பு வாக​னங்​கள் மற்​றும் ஹைட்​ராலிக் ஏணி​களு​டன் தீயணைப்​புத் துறை​யினரும், உள்​ளூர் போலீ​ஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயைக் கட்​டுக்​குள் கொண்டு வந்​தனர்.

இதில் கட்​டிடம் முழு​வதும் பரவிய அடர்ந்த புகை​யில் சிக்​கி,பெண் உட்பட 2 பேர் உயி​ரிழந்​தனர். கட்​டிடத்​தில் இருந்த மற்றவர்கள் பத்திர​மாக மீட்​கப்​பட்​டனர்.

இது தொடர்​பாகக் கட்​டிட உரிமை​யாளர் மீது பல்வேறு சட்​டப் பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டு, அவர் காவலில் எடுக்​கப்​பட்​டுள்​ளார். மேலும், இந்​தக் கட்​டிடத்​தில் முறை​யாகத் தீயணைப்​புப் பாது​காப்பு விதி​முறை​கள் பின்​பற்​றப்​பட்​டதா என்று போலீஸார் வி​சா​ரித்து வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here