டி20 தொடரை இழந்தது இந்திய அணி

0
22

இங்கிலாந்து – இந்தியா அணிகள் இடையிலான 4-வது டி20 போட்டி நேற்று முன்தினம் பிரிஸ்டலில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 49 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். வைபவ் சூர்யவன்ஷி 15, அபிஷேக் சர்மா 16, இஷான் கிஷன் 4, ஷிவம் துபே 22, திலக் வர்மா 11, வாஷிங்டன் சுந்தர் 5, அக்சர் படேல் 1 ரன்களில் நடையை கட்டினர்.

159 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 13.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. கேப்டன் ஹாரி புரூக் 35 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 79 ரன்களும், பில் சால்ட் 42 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 59 ரன்களும் விளாசினர். வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் ஆகியோர் வீசிய 8 மற்றும் 9 ஓவர்களில் ஹாரி புரூக் 37 ரன்களை விளாசி மிரட்டினார்.

9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-0 என தன்வசப்படுத்தி உள்ளது. முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில் 2-வது போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்திலும், 3-வது போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்திலும் இங்கிலாந்து அணி வெற்றி கண்டிருந்தது. கடைசி டி20 போட்டி நாளை சவுத்தாம்டனில் நடைபெறுகிறது.

நடப்பு டி20 உலக சாம்பியனான இந்திய அணி அடுத்தடுத்து இரு தொடர்களை இழந்துள்ளது. அதிலும் உலகக் கோப்பை தொடரை வென்ற 4 மாதங்களுக்குள் இந்த தோல்வி ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை இழந்த இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரையும் பறிகொடுத்துள்ளது. 2018-19-ம் ஆண்டு காலகட்டத்துக்கு பிறகு இந்திய அணி அடுத்தடுத்து டி20 தொடர்களை இழப்பது இதுவே முதல் முறையாகும்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here