‘ராமர் கோயில் காணிக்கை திருட்டை விசா​ரிக்​கும் சிறப்பு விசாரணை குழு முடிவு​கள் கசிந்து விட்டன’

0
15

அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டை விசா​ரிக்​கும் எஸ்​ஐடி​யின் முடிவு​கள் கசிந்து விட்​ட​தாக அயோத்தி சமாஜ்​வாதி எம்​.பி. அவதேஷ் பிர​சாத் புகார் கூறி​யுள்​ளார்.

அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவ​காரம் தொடர்ந்து சூடு​பிடித்து வரு​கிறது. இந்த விவ​காரத்​தில் உ.பி.​யின் ஆளும் பாஜக​வுக்கு எதிர்க்​கட்​சிகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரு​கின்​றன. தீவிர​மான கேள்வி​களை எழுப்பி வருகின்றன. அயோத்தி தொகுதி சமாஜ்​வாதி எம்​.பி.​யான அவதேஷ் பிர​சாத் எஸ்​ஐடி மீது கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

இது குறித்து அவதேஷ் பிர​சாத் கூறிய​தாவது: ராமர் கோயில் காணிக்கை திருட்​டின் விசா​ரணைக்கு இனி எந்த அர்த்​த​மும் இல்லை. அதன் முடிவு​கள் ஏற்​கெனவே கசிந்​து​விட்​டன. நான் இதை என் சொந்​தக் கருத்​தாகச் சொல்​ல​வில்​லை. முற்​றி​லும் ரகசிய​மாக வைக்​கப்பட வேண்​டிய எஸ்​ஐடி அறிக்​கை​யின் அடிப்படை​யிலேயே பேசுகிறேன். இப்​போது அந்த அறிக்கை ஊடகங்​களில் வெளி​யாகி​விட்​ட​தால், இந்த விசா​ரணை​யின் நோக்கமே சிதைந்​து​விட்​டது.

ராமர் கோயில் காணிக்கை திருட்டு என்​பது கோடிக் ​கணக்​கான ராம பக்​தர்​களின் நம்​பிக்​கை​யின் மீதான தாக்​குதல். இதில் பக்திக்கு துரோகம் இழைக்​கப்​பட்​டுள்​ளது. ஏழைகளு​டன் ஒரு பெரிய விளை​யாட்டு விளை​யாடப்​பட்​டுள்​ளது. இந்த விவகாரத்தில் ஒரே வழி​தான் உள்​ளது. உச்ச நீதி​மன்​றம் இதில் தலை​யிட்டு நடவடிக்கை எடுக்க வேண்​டும். நீதி​மன்​றம் முன்​வந்து ஒரு குழுவை அமைக்க வேண்​டும். அக்​குழு​வின் விசாரணையில் குற்​ற​வாளி​கள் அடை​யாளம் காணப்​பட்​டு, அவர்கள் மீது மிகக் கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​பட வேண்டும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here