‘சூப்பர் ஹீரோ’வில் அண்ணன் – தம்பி கதை

0
27

அர்​ஜுன் தாஸ் ஹீரோ​வாக நடிக்​கும் படம் ‘சூப்​பர் ஹீரோ’. இதில் தேஜு அஷ்​வினி நாயகி​யாக நடிக்​கிறார்.

அறி​முக இயக்​குநர் விக்​னேஷ் வேணு கோ​பால் இயக்​கும் இப்​படத்தை சோல்​ஜர்ஸ் பேக்​டரி சார்​பில் சினிஸ் ரெடாக்டட் ஸ்டூடியோஸின் ஷான்ஜன்.ஜி, இணைந்து தயாரித்து உள்ளார். ஹேஷம் அப்​துல் வஹாப் இசையமைத்​துள்​ளார். சத்யா ஒளிப்பதிவு செய்​துள்ள இப்​படத்​தின் முதல் தோற்​றம் வெளி​யாகி வரவேற்​பைப் பெற்​றுள்​ளது.

படம் ​பற்றி இயக்​குநர் விக்​னேஷ் வேணு கோ​பால் கூறும்​போது, “இது எனக்கு முதல் படம். இயக்​குநர் சினிஸிடம் ‘பலூன்’ படத்​தில் உதவி இயக்​குந​ராகப் பணி​யாற்​றினேன். அவரே இப்​படத்​தைத் தயாரிக்​கிறார். இது ஆக் ஷன் டிராமா கதை என்​றாலும் அண்ணன் – தம்பி பிரச்​சினை முக்​கிய​மான​தாக இருக்​கும். யாரைப் பற்​றி​யும் கவலைப்​ப​டாத சுயநல​மான அண்​ணன், ஒரு கட்​டத்​தில் தனது தம்​பிக்​காக என்ன செய்​கிறான் என்​பது கதை.

சில சர்​பிரைஸ் விஷ​யங்​கள் படத்​தில் இருக்​கும். மலை​யாளத்​தில் வெளி​யான ‘மின்​னல் முரளி’ படத்​தில் நடித்த வசிஷ்ட், தம்​பி​யாக நடிக்​கிறார். அண்​ணன் – தம்​பிக்​கான உணர்​வுப்​பூர்​வ​மான காட்சிகள், ரசிக்​கும்​படி இருக்​கும். வில்​ல​னாக சாண்டி மாஸ்​டர் நடிக்​கிறார்.

படத்​தின் கிளை​மாக்​ஸுக்​காக ஒரு தொழிற்​சாலை செட் அமைத்துப் படப்​பிடிப்பு நடத்​தினோம். இது சென்​னை​யில் நடக்கும் கதை என்​றாலும் பிளாஷ்பேக் பகுதி கோவில்​பட்டி அருகே நடக்​கும். படப் ​பிடிப்பு முடிவடைந்​து​விட்​டது” என்​றார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here