அயோத்தி ராமர் கோயில் காணிக்கை விவகாரம் வெளியாவதற்கு முன்பு ரூ.18 லட்சமாக இருந்த தினசரி டெபாசிட் ரூ.24 லட்சம் ஆக உயர்வு

0
23

உத்தர பிரதேசத்​தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கை சிறப்பு விசா​ரணைக் குழு (எஸ்​ஐடி) விசா​ரித்து வரு​கிறது.

இந்த விவ​காரம் வெளிச்​சத்​துக்கு வரு​வதற்கு முன்பு வரை, ​ராம ஜென்​ம பூமி தீர்த்த க் ஷேத்ரா அறக்​கட்​டளை​யின் வங்​கிக் கணக்கு​களில் தின​மும் சராசரி​யாக ரூ.16 லட்​சம் முதல் ரூ.18 லட்சம் வரை டெபாசிட் செய்​யப்​பட்​டுள்​ளது.

ஆனால், திருட்டு விவ​காரம் வெளிச்​சத்​துக்கு வந்த பிறகு, இந்​தத் தொகை தின​மும் ரூ.24 லட்​சம் முதல் ரூ.26 லட்​ச​மாக அதிகரித்துள்​ளது. இந்​தத் தரவு​களின் அடிப்​படை​யில், இதற்கு முன்பு தின​மும் ரூ.6 லட்​சம் முதல் 8 லட்​சம் வரை திருடப்பட்டிருக்கலாம் என்று சந்​தேகிக்​கப்​படு​கிறது.

பக்​தர்​கள் காணிக்​கை​யாகச் செலுத்​திய தங்​கம், வெள்ளி மற்​றும் பிற விலைம​திப் ​பற்ற கற்​களின் துல்​லிய​மான அளவும், மதிப்​பும் வழக்​க​மான நடை​முறை​களின் பகு​தி​யாக இல்​லை. இந்​தக் குறைபாட்டை குற்​றம்சாட்​டப் ​பட்​ட​வர்​கள் தங்​களுக்கு சாதகமாகப் பயன்​படுத்தி உள்​ளனர். கோயி​லிலிருந்து திருடப்பட்ட நகைகளை உருக்​கி, தங்​கக் கட்​டிகளாக மாற்றியிருக்கலாம் என்​றும் எஸ்​ஐடி சந்​தேகிக்​கிறது.

ஏனெனில், கைதானவர்​களிட​மிருந்து திருடப்​பட்ட நகைகளை இது​வரை மீட்க முடிய​வில்​லை. நகைகளாகப் பெற்ற காணிக்கைகள் மற்​றும் அவற்​றைப் பராமரிக்​கும் தற்​போதைய நடை​முறை​கள் குறித்து எஸ்​ஐடி விரி​வாக விசா​ரணை நடத்​தி​யது. நகைகள் தொடர்​பான ஆவணங்​களை​யும், இந்​திய அரசின் நிறுவன​மான ‘பிரிண்​டிங் அண்ட் மின்​டிங் கார்ப்​பரேஷன் ஆஃப் இந்​தி​யா’ உடனான பரிவர்த்​தனை தொடர்​பான கோப்​பு​களும் ஆய்​வுக்​காக வரவழைக்​கப்​பட்​டுள்​ளன. இந்த நிறு​வனத்​துக்கு அனுப்​பப்​பட்ட உலோகங்​களின் முழு​மை​யான விவரங்​களை​யும் எஸ்​ஐடி அதி​காரி​கள் கோரி​யுள்​ளனர்.

இதனிடையே, அறக்​கட்​டளை சமர்ப்​பித்த வரு​டாந்​திர வரவு செலவு​கள் மீதான தணிக்கை கணக்​கு​களி​லும் தவறுகள் இருப்பதை எஸ்​ஐடி கண்​டு​பிடித்​துள்​ளது. இதை உறு​தி ​செய்ய அறக்​கட்​டளை​யின் முக்​கிய நிர்​வாகி​களான சம்​பத் ராய், அனில் மிஸ்ரா மற்​றும் கோபால் ராவ் ஆகியோரிட​மிருந்து சில முக்​கிய ஆவணங்​களை எஸ்​ஐடி கோரி​யுள்​ளது.

மத்​திய அரசின் முன்​னாள் உள்​துறை செய​லா​ள​ரான எஸ்​.லக் ஷ்மி நாரயணா தன் மனைவி சரஸ்​வ​தி​யுடன் கடந்த ஏப்​ரல் 2024ல் அயோத்​திக்கு வந்​துள்​ளார். அப்​போது தங்க முலாம் பூசப்​பட்ட 522 பக்க ராமச் ​சந்​திர​மானஸ் புனித நூலை (147 கிலோ) கோயிலுக்காக சம்​பத் ராயிடம் அளித்​துள்​ளார். கருவறையில்வைப்​ப​தாகக் கூறப்​பட்ட நூலை காண​வில்லை என்றும், இதற்​கான ரசீது அளிக்​க​வில்லை என்​றும் புகார் தெரிவித்​துள்​ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here