5 மொழிகளில் உருவாகும் ‘ஃபீல் மை லவ்’

0
25

வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் அதிசயம் நிகழலாம் என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகும் படம், ஃபீல் மை லவ். இதில் எம்.எஸ்.பாஸ்கர், ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி, ராஜ் ஐயப்பா, நோபிள் ஜேம்ஸ், பிரியங்கா, மதுசூதனன் ராவ் உள்பட பலர் நடிக்கின்றனர்.

எம்.எஸ்.சதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜ ரவிவர்மா.எஸ், பாலசுப்ரமணியன் ஆகியோர் இசையமைக்கின்றனர். ஹரி பிரகாஷ் எழுதி இயக்குகிறார். பல ‘பான்-இந்தியா’ படங்களை வெளியிட்டுள்ள ஏ.என். பாலாஜி தமிழில் தயாரிக்கும் படம் இது.

இப்படம் பற்றி ஹரி பிரகாஷ் கூறும்போது, “இது, சுவாரஸ்யமான தருணங்கள், இயல்பான உறவுகள், ஆழமான உணர்ச் சிகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த தனித்துவமான காதல் – நகைச்சுவைத் திரைப்படமாக இருக்கும். இப்போது இதன் படப்பிடிப்பு மூணாறு பகுதியில் நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது” என்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here