‘திருக்​குறள் 2’ படப்​பிடிப்பு தொடக்கம்

0
20

ஏ.ஜே.​பால​கிருஷ்ணன் இயக்​கத்​தில் கடந்த ஆண்டு வெளி​யான திரைப்​படம்​ ‘​திருக்​குறள்’. இதன் தொடர்ச்​சி​யாகத் ‘திருக்​குறள்’ படத்​தில் இடம்​பெறாத கருத்​துகளை வலி​யுறுத்தி இப்​படத்​தின் 2ம் பாகம் தயா​ராகிறது.

விஐடி வேந்​தர் ஜி.​விசு​வ​நாதன் வழங்க, ரமணா கம்​யூனிகேஷன்ஸ் தயாரிக்​கிறது. இப்​படம் ஆங்​கிலத்​தில் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹிந்​துஸ்​தான்’ என்ற பெயரில் உரு​வாகிறது. முதல் பாகத்தில் நடித்த கலைச் ​சோழன், தன லட்​சுமி ஆகியோர் இதிலும் வள்​ளுவன்- வாசுகி​யாக நடிக்​கின்​றனர். இதன் படப்பிடிப்பு பூஜை​யுடன் நேற்று தொடங்​கியது.

இயக்​குநர் ஏ.ஜே.​பால​கிருஷ்ணன் கூறும்​போது, “இப்​படத்​தில், திரு​வள்​ளுவர் காலத்​தின் கலாச்​சா​ரத் தொடர்​பு​கள், வணி​கத் தொடர்பு, தமிழர்​களின் சங்​க​கால நாகரீகம் படமாக்​கப்பட உள்ளது. சர்​வ​தேசப் பார்​வை​யாளர்​களை ஈர்க்​கும் வகை​யில் ஹாலிவுட் கலைஞர்​களின் பங்​களிப்​பும், ஏ.ஐ. தொழில்​ நுட்​ப​மும் பயன்​படுத்​தப்பட உள்​ளன. தமிழ்ப் பண்​பாட்​டைத் திருக்​குறள் வாயி​லாக, உலகுக்​குப் பறை சாற்​று​வதே இதன் நோக்​கம்” என்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here