தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் அரசு தலைமைய மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். உள்நோயாளிகளிடம் மருத்துவர்கள் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கிறார்களா என கேட்டறிந்தார். மாவட்ட சுகாதார அலுவலர், மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் இதில் பங்கேற்றனர்.














