கத்தார் எரிவாயு ஆலையில் வெடிவிபத்து இந்தியர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு; 66 பேர் காயம்

0
17

கத்​தா​ரின் எரி​வாயு சுத்​தி​கரிப்பு ஆலை​யில் ஏற்​பட்ட வெடி​விபத்​தில் இந்தியர்கள் உட்பட 13 பேர் உயி​ரிழந்​தனர்.

இதுகுறித்து கத்தார் எரிசக்​தித் துறை அமைச்​சர் சாத் ஷெரிடா அல்​-​காபி செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கத்​தா​ரின் ராஸ் லஃப்​பான் தொழில் துறை பகு​தி​யில் உள்ள ‘பர்​சான்’ எரி​வாயு விநியோக ஆலை​யில் ஞாயிற்​றுக்​கிழமை இரவு வெடி​விபத்து ஏற்பட்​டது.

இதில், இந்​தியா மற்​றும் பாகிஸ்​தான் நாடு​களைச் சேர்ந்த 13 பணியாளர்​கள் உயி​ரிழந்​துள்​ளனர். படு​காயமடைந்த 66 பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. அவர்​களில் யாருடைய உயிருக்​கும் ஆபத்து இல்​லை. இது முற்​றி​லும் ஒரு தொழிற்​சாலை விபத்து மட்​டுமே. இதில் எவ்​வித சதிவேலையோ அல்​லது தாக்​குதலோ இல்​லை. இவ்​வாறு அல்​-​காபி கூறி​னார்.

இந்த விபத்து குறித்து தோகா​வில் உள்ள இந்​திய தூதரகம் தனது எக்ஸ் பக்​கத்​தில் ஆழ்ந்த கவலையை தெரி​வித்​துள்​ளது பாதிக்​கப்​பட்ட இந்​தி​யர்​கள் மற்​றும் அவர்​களது குடும்​பத்​தினர் அவசர உதவிக்​குத் தொடர்​பு​கொள்ள +974-55647502, +974-55384683 ஆகிய தொலைபேசி எண்​களை​யும், cons.doha@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியை​யும் இந்​திய தூதரகம்​ அறி​வித்​துள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here