தவெக அரசின் முதல் ஆளுநர் உரை: தலைவர்கள் வரவேற்பும், எதிர்ப்பும்

0
25

தமிழக சட்​டப்​பேர​வை​யில் ஆளுநர் அர்​லேகர் உரைக்கு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் பலர் வரவேற்​பும் எதிர்ப்​பும் தெரி​வித்​துள்​ளனர்.

தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த்: ஆளுநர் உரை ஆளுங்​கட்​சிக்கு முழு ஆதரவை தெரிவிக்​கும் அறி​விப்​பாக மட்​டுமே இருந்​தது. இது​போன்ற அறி​விப்​பு​களை நிறைய பார்த்​து​விட்டோம்.

வெறும் அறி​விப்​பாக மட்​டுமில்​லாமல், அதி​காரப்​பூர்​வ​மான, ஆளு​மைமிக்க ஒரு ஆட்​சி​யாக இந்த ஆட்சி இருக்க வேண்​டும். பாலியல் குற்​ற​வாளி​களுக்கு என்​க​வுன்ட்டர்​தான் தீர்​வாக அமை​யும். சட்​டப்​பேர​வை​யில் தமிழ்த்​தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் ஆரம்​பத்​தி​லும், முடி​விலும் பாடப்​பட்​டதை நான் வரவேற்​கிறேன்.

பாமக தலை​வர் அன்​புமணி: மத்​திய அரசின் மக்​கள்​தொகை கணக்​கெடுப்​புக்​குப்பின், `சமூகநீதி சர்​வே’ நடத்​தப்​படும் என்ற ஆளுநர் உரையின் அறி​விப்பு வரலாற்​றுச் சிறப்​புமிக்​கது. பாட்​டாளி​களின் 46 ஆண்​டுக்​கால சமூகநீதி கோரிக்கை மற்​றும் கனவு நனவாக உள்​ளது மகிழ்ச்சி​யளிக்​கிறது.

கடந்த காலங்​களில் பல முதல்​வர்​களிடம் வலி​யுறுத்​தி​யும் சாத்​தி​ய​மா​காத இக்​கோரிக்​கையை நிறைவேற்​று​வ​தாக அறி​வித்​துள்ள முதல்​வர் விஜய்க்கு நன்​றி.

சிபிஎம் மாநிலச் செய​லா​ளர் சண்​முகம்: நிதிப் பகிர்​வுக்​கான சிறப்​புக் குழு, போதை ஒழிப்​பு, வெளிப்​படை​யான நிர்​வாகம், ஆசிரியர் மற்​றும் உதவிப் பேராசிரியர் காலிப் பணி​யிடங்​கள் நிரப்​பப்​படும் என்ற அறி​விப்​பு​களை சிபிஎம் வரவேற்​கிறது.

எனினும், தவெகவின் கொள்​கை​யான `சா​தி​வாரி இட ஒதுக்​கீடு’ என்​பது இட ஒதுக்​கீட்​டின் அடிப்​படையையே கேள்விக்​குள்​ளாக்​கும் என்​ப​தால் அதை ஏற்க முடி​யாது.

சிபிஐ மாநிலச் செய​லா​ளர் வீர​பாண்​டியன்: தொழிலா​ளர் நலன், சட்ட உரிமை​கள், கண்​ணி​ய​மான வாழ்​வுக்​கான ஊதி​யம், ஓய்​வூ​தி​யம் உள்ளிட்ட உழைக்​கும் மக்​களின் எதிர்​பார்ப்​பு​கள் குறித்து ஒரு வார்த்தை கூட ஆளுநர் உரை​யில் இல்லை என்​பதும், மத்​திய அரசின் தொழிலா​ளர் விரோத நான்கு சட்​டத் தொகுப்​பு​கள் குறித்​தும் ஆளுநர் உரை அமைதி காத்​திருப்​பதும் பெரும் ஏமாற்​றம் அளிக்​கிறது.

மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ: கனிமவளக் கொள்ளை தடுப்​பு, ஊழல் ஒழிப்​பு, அரசு இயந்​திரம் டிஜிட்​டல் மயமாக்​கல், போதை ஒழிப்பு மற்​றும் பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​களை இரும்​புக்​கரம் கொண்டு ஒடுக்​குதல் போன்ற அறி​விப்​பு​கள் சிறப்​பானவை.

அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன்: தவெக அரசு தயாரித்த ஆளுநர் உரை, வெறும் `தங்க முலாம் பூசப்​பட்ட தகரம்’ ஆகும். இரு​மொழிக் கொள்​கை​யைத் திணிப்​பதும், தேசிய கல்விக் கொள்​கையை எதிர்ப்​பதும் மாணவர்​களின் எதிர்​காலத்​தைக் கேள்விக்​குறி​யாக்​கி​யுள்​ளது.

சட்ட ஒழுங்கு சீர்​குலைந்​துள்ள நிலை​யில், பெண்​கள் பாது​காப்பு குறித்த அறி​விப்பு கேலிக்​கூத்​தானது. மகளிர் திட்​டம், சிலிண்​டர், தாலிக்கு தங்​கம் உள்​ளிட்ட தவெக​வின் கவர்ச்​சித் தேர்​தல் வாக்​குறு​தி​களை நிறைவேற்ற எந்த உத்​தர​வாத​மும் இல்​லை.

நிதி​நிலை​யைக் காரணம் காட்டி மக்​களை ஏமாற்​றி​யுள்​ளனர். சாதி​வாரி சர்வே அறி​விப்பு மட்​டுமே இதில் ஆறு​தல் தரும் ஒரே விஷ​யம்.

தவாக தலை​வர் வேல்​முரு​கன்: சமூகநீதி கணக்​கெடுப்பு நடத்​தப்​படும் என்ற அறி​விப்புக்கு நன்​றி. ஆளுநர் உரையில் எதிர்​பார்த்த திட்​டங்​களோ, தேர்​தல் வாக்​குறு​தி​கள் குறித்த அறி​விப்​பு​களோ இல்லை.

மஜக தலை​வர் தமி​முன் அன்​சா​ரி: ஆளுநர் உரை சடங்கு பூர்​வ​மான சம்​பிர​தாய உரை​யாக அமைந்​திருக்​கிறது. அது​வும் முந்​தைய தி​முக அரசின் கொள்​கைகளை அப்படியே வழிமொழிகிற வகை​யில்​ பல்​வேறு கருத்​துகள்​ இதில்​ இடம்​பெற்​றிருந்​தன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here