முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் ஆன்லைனில் ஆஜராக நீதிமன்றம் அனுமதி: விசாரணை ஆக.7-க்கு தள்ளிவைப்பு

0
25

முதல்​வரும் தமிழக வெற்​றிக் கழக தலை​வரு​மான விஜய் – அவரது மனைவி சங்​கீதா இடையி​லான விவாகரத்து வழக்கு செங்​கை குடும்ப நல நீதி​மன்​றத்​தில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

இதில் இருதரப்​பினருக்​கும் முக்​கிய​மான உத்​தர​வு​கள் பிறப்​பிக்​கப்​பட்​ட​தால் வழக்கு புதிய திருப்​பத்தை எட்​டி​யுள்​ளது.

வழக்​கில் நேரில் ஆஜராவ​திலிருந்து விலக்கு அளித்​து, வீடியோ கான்​பரன்ஸ் மூலம் ஆஜராக அனு​மதி வழங்க வேண்​டும் என விஜய் தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்​டிருந்த மனுவை நீதி​மன்​றம் ஏற்​றுக் கொண்டு அனு​மதி வழங்​கியது.

தனது சார்​பில் ஆஜராகும் வழக்​கறிஞருக்கு அதி​காரம் வழங்​கி​யிருப்​பதை விஜய் ஆன்​லைன் வாயி​லாக நீதி​மன்​றத்​தில் தோன்றி உறு​திப்​படுத்த வேண்​டும் என உத்​தர​விடப்பட்டது.

மறு​புறம், சங்​கீதா தரப்​பில் இது​வரை வக்​காலத்து மட்​டுமே தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ள​தாக​வும், வழக்​கின் அடுத்​தகட்ட நடவடிக்​கைக்கு தேவை​யான முக்​கிய மனு இன்​னும் தாக்​கல் செய்​யப்​பட​வில்லை என்​றும் தெரிவிக்​கப்​பட்​டது.

இதையடுத்து அந்த மனுவை தாக்​கல் செய்ய சங்​கீ​தாவுக்கு நீதி​மன்​றம் அனு​மதி வழங்​கியது. அவர் தரப்​பில் ஆஜராகும் வழக்​கறிஞர் யார் என்​பதை உறு​திப்​படுத்த நீதிபதி அறி​வுறுத்​தி​னார். இந்த வழக்​கின் வி​சா​ரணை ஆக. 7-ம்​ தேதிக்​கு தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here