குமரி மாவட்டத்தில் நூற்றாண்டைக் கடந்த இடைக்காடு அரசு தொடக்கப் பள்ளியில், பள்ளி திறப்பு விழாவை முன்னிட்டு சிறுவர் சிறுமியருக்கு மேளதாளம் முழங்க பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். புத்தன் சந்தைப் பகுதியிலிருந்து பள்ளி வளாகம் வரை நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து, வகுப்புகள் தொடங்கப்பட்டு மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.















