குமரி மலையோரப் பகுதியில் காட்டு யானை தாக்கி ராஜேஷ் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, ஆதிவாசி பழங்குடியின மலைக்கிராம மக்கள் நேற்று (ஜூன் 3) மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவிலும் மின்சாரம் இல்லாததால் தீ பந்தல்களை ஏந்தியும், சாலையில் தீ மூட்டியும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது.















