பிலிப்பைன்ஸ், வியட்நாமை தொடர்ந்து இந்தோனேசியாவுக்கும் பிரம்மோஸ் ஏவுகணை விற்பனை

0
20

வியட்​நாமை தொடர்ந்​து, இந்தோனேசியா​வுக்​கும் இந்​தி​யா​வின் அதிநவீன பிரம்மோஸ் சூப்​பர்​சோனிக் குரூஸ் (ஒலியை விட அதிவேக​மாகச் செல்​லும்) ஏவுகணைகளை ஏற்றுமதி செய்​வதற்​கான ஒப்​பந்​தம் இறு​திக்​கட்​டத்தை எட்டியுள்ளதாக மத்​திய பாது​காப்​புத் துறைச் செயலர் ராஜேஷ் குமார் சிங் தெரி​வித்​துள்​ளார்.

சிங்​கப்​பூரில் நடை​பெற்ற ‘ஷாங்​ரி-லா பாது​காப்பு உச்சி மாநாட்டில் பங்​கேற்​ற​போது அவர் இதுகுறித்து கூறுகை​யில், ‘‘வியட்​நாம் நாட்​டுட​னான பிரம்​மோஸ் ஏவு​கணை விற்​பனை ஒப்பந்​தம் ஏற்​க​னவே கையெழுத்​தாகி​விட்​டது. எனினும், இதுகுறித்த அதி​காரப்​பூர்வ அறி​விப்பு இன்​னும் பொது​வெளி​யில் வெளி​யிடப்​பட​வில்​லை. இதே​போல், இந்​தோ​னேசியா நாட்டுடனான பேச்​சு​வார்த்​தை​யும் சுமுக​மாக முடிவடை​யும் நிலை​யில் உள்​ளது. விரை​வில் அந்த ஒப்​பந்​த​மும் இறுதி செய்யப்படும்’’ என்​றார்.

வியட்​நா​முடன் மேற்​கொள்​ளப்​பட்​டுள்ள பிரம்​மோஸ் ஏவு​கணை விற்​பனை ஒப்​பந்​தத்​தின் ஒட்​டுமொத்த மதிப்பு சுமார் ரூ.5,800 கோடி என்று கூறப்​படு​கிறது. இந்த ஒப்​பந்​தத்​தின் கீழ், கடற்கரைப் பாது​காப்​புக்​கான ஏவு​கணை, பேட்​டரி​கள், அவற்றை இயக்​கு​வதற்​கான பயிற்சி மற்​றும் தளவாட உதவி​களை இந்​தியா வழங்​க​வுள்​ளது. மேலும், பிற்​காலத்​தில் போர் விமானங்​களில் இருந்து ஏவப்​படும் பிரம்​மோஸ் ஏவு​கணை​களை​யும் வாங்​க ஆர்வம் காட்டுவ​தாக கூறப்படுகிறது.

கடந்த 2022-ம் ஆண்​டில் பிலிப்​பைன்ஸ் சுமார் 375 மில்​லியன் டாலர் மதிப்​பில் பிரம்​மோஸ் ஏவு​கணை​களை வாங்​கு​வதற்கு இந்தி​யா​வுடன் ஒப்​பந்​தம் செய்​து, முதன்​முதலாக இந்த ஏவுகணையைப் பெற்ற வெளி​நாடு என்ற பெரு​மை​யைப்பெற்றது. இந்த நிலை​யில் தற்​போது வியட்​நாமைத் தொடர்ந்து இந்தோனேசி​யா​வும் இந்த வரிசை​யில் இணை​ய​வுள்​ளது குறிப்பிடத்​தக்​கது.

தென் சீனக் கடல் பகு​தி​யில் சீனா​வுக்​கும், அதன் அண்டை நாடுகளான வியட்​நாம், இந்​தோ​னேசி​யா, பிலிப்​பைன்ஸ் ஆகிய நாடு​களுக்​கும் இடையே கடல் எல்​லைப் பகிர்வு தொடர்​பாக நீண்ட​கால​மாகப் பதற்​றம் நிலவி வரு​கிறது. இந்த சூழலில் இந்தியா​வின் ஏவு​கணை​களை இந்த நாடு​கள் வாங்​கு​வது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here