விமானப்படை விமானங்களில் நீட் வினாத்தாள் விநியோகம்

0
20

மருத்​துவ இளநிலை படிப்​பு​களுக்​கான நீட் நுழைவுத் தேர்வுக்கான வினாத்​தாள் முன்​கூட்​டியே கசிந்​திருப்​பது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. மகா​ராஷ்டி​ரா​வின் புனே நகரை சேர்ந்த சில பேராசிரியர்​கள், நீட் வினாத்​தாள் தயாரிப்​பில் ஈடு​பட்டு இருந்​தனர். அவர்​கள் மூல​மாக நாடு முழு​வதும் வினாத்​தாள் கசிந்​திருப்​பது சிபிஐ விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. இதுதொடர்​பாக இது​வரை 13 பேர் கைது செய்​யப்​பட்டனர்.

இந்த சூழலில் நீட் மறு​தேர்வு ஜுன் 21-ம் தேதி நடை​பெறும் என்று தேசிய தேர்வு முகமை அறி​வித்​துள்​ளது.இதுகுறித்து மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் கூறிய​தாவது: இதற்கு முன்​பாக இந்​திய அஞ்​சல் துறை உதவி​யுடன் நீட் வினாத்​தாள்​கள் பல்​வேறு மாநிலங்​களுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டன. தற்​போது நீட் மறு​தேர்​வுக்​கான வினாத்​தாள்​களை பாது​காப்​பாக கொண்டு செல்ல விமானப் படை​யின் உதவியை கோரி உள்​ளோம். இதற்கு மத்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் ஒப்​புதல் வழங்கி உள்​ளார்.

பாது​காப்​புத் துறை, உள்​துறை அமைச்சகம் மற்​றும் அனைத்து மாநில அரசுகளின் உதவி​யுடன் நீட் மறு​தேர்வு நேர்​மை​யாக நடத்​தப்​படும். சிறு தவறுகூட ஏற்​ப​டாத வகை​யில் பல்​வேறு பாது​காப்பு நடை​முறை​கள் கண்​டிப்​புடன் பின்​பற்​றப்​படு​கின்​றன.இவ்​வாறு அவர் கூறினார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here