எபோலோ தொற்று பரவல் தீவிரம்: காங்கோ, உகாண்டா, தெற்கு சூடானுக்கு பயணம் செய்வதை தவிர்க்க மத்திய அரசு அறிவுரை

0
21

காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடானில் எபோலா வைரஸ் பரவல் உள்ளதால், இந்த நாடுகளுக்கு பயணத்தை தவிர்க்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் புண்டிபுக்யோ என்ற தொற்று காரணமாக எபோலோ காய்ச்சல் பரவி வருகிறது.

இது அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது. தற்போது இதற்கு தடுப்பூசி இல்லை. ஆனால் உலக சுகாதார அமைப்பு இந்த நாடுகளில் சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது.

இதனால் ஆப்பிரிக்க நாடுகளில் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் இந்த நாடுகளுக்கு மக்கள் அத்தியாவசியப் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும், தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், உள்ளூர் நிர்வாகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் பலர் படிக்கின்றனர். பலர் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். அதேபோல் ஆப்பிரிக்கர்களும் டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

எனவே, இந்தியாவுக்குள் எபோலா வைரஸ் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் மத்திய அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here