தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் செங்கோட்டையன் 22-ம் தேதி இரவு சென்னையில் இருந்து விமானத்தில் கோவை வந்தார். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதனிடையே நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக கோவை-அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செங்கோட்டையன் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும், உடல்நலம் சீராக இருப்பதால் இன்று (மே 25) காலை வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.















